உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




ஆட்சி

முறை

55

“கங்கைகொண்ட சோழபுரத்துக் கோயிலுள்ளால், திருமஞ்சன சாலையிலெழுந்தருளி யிருந்து உதகம் பண்ணியருளா நிற்க", "ஸ்ரீராஜராஜ தேவர் தஞ்சாவூர்ப் பெரிய செண்டுவாயிற் சித்திர கூடத்துத் தெற்கில் கல்லூரியில் எழுந்தருளி."

66

காஞ்சீபுரத்துக் கோயிலுள்ளால் அட்டத்து வெள்மேலை மண்டபம் ராஜேந்திர சோழனின் சொட்டையில் எழுந்தருளி யிருந்து."

"புரசை நாட்டுச் சிவபுரத்துப் பகலிருக்கையில் திருவமுது செய்தருளா விருந்து." (சோழவமிச சரித்திரச் சுருக்கம். ப.49)

வேற்றரசரும் மாற்றரசரும் விடுத்த தூதர், வாயிற் காவலன் வாயிலாய் அரசனுக்குத் தம் வரவைத் தெரிவித்து. உத்தரவு பெற்றபின் ஓலக்க மண்டபம் புகுந்து, தம் அரசர் திருமுகத்தை நீட்டி, அதுபற்றிய வினாக்கட்கெல்லாம் அஞ்சாது விடை கூறுவர்.அரசன் தன் அவை யுடன் நன்றாக ஆய்ந்து அதற்குத் தக்க விடை விடுப்பன். அவ்வவ் வரசர் தரத்திற்கும் நட்பளவிற்கும் தக்கபடி, அவர் விடுத்த தூதரைச் சிலபல நாள்கள் அரசன் காக்கவைப்பதுமுண்டு.

தலைநகரிலிருந்து அறங்கூறவையத்தில், பொதுவகையான வழக்குகளையெல்லாம் அவையத்தாரே தீர்ப்பர்.

66

'எங்குல வணிக ரேறே யெம்மனோர் வழக்கை யிந்தப் புங்கவ ரிடனாத் தீர்த்துத் தருகெனப் புலம்பி யார்த்தார்"

"நரைமுது புலியன் னான்சொற் கேட்டலும் நடுங்கிச் சான்றோர். இருவர்சொல் வழக்குமேற்கொண் டனுவதித் திரண்டு நோக்கி'

66

'அனையது கேட்ட வான்றோ ரனைவரும் நோக்கி யந்தத் தனபதி வணிகர் தாமே யிவரெனச் சாற்ற லோடும்

மனவலித் தாயத் தார்தம் வழக்கிழுக் கடைந்த தீது நனைவழி வேம்பன் தேரிற் றண்டிக்கு நம்மை யென்னா

99

(மாமனாக வந்து வழக்குரைத்த படலம். 28,30,31)

என்று பரஞ்சோதிமுனிவர், தனபதிச் செட்டியார் வழக்கை மதுரை யறங்கூறவையத்தாரே தீர்த்ததாகக் கூறியிருத்தல் காண்க. சிறப்பான தும் அரசனொடு தொடர்புற்றதுமான வழக்காயின், அரசனே மன்றத்திருந்து தீர்ப்பான். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், மலையமான் திருமுடிக்காரி மக்களைப்பற்றிய செய்தியை உறந்தை மன்றத்திலிருந்து ஆய்ந்தமை காண்க. ஈரூரார்க்கும். இருகுலத்தார்க்கும், இருமதத்தார்க்கும், இரு கோயிலார்க்கும்,