உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருளாதாரம்

69

என்னுங் குறளால் அறியப்படும். வாரம் ஆறிலொரு பகுதியாயிருந்த தினாலேயே அது பகுதியெனப் பெயர் பெற்றது,

வரி வாங்குவதற்குப் பொதுவாக நல்விளைவே கவனிக்கப் பட்டது. அரைவிளைச்சலும் நட்டுப்பாழ் அழுகிச்சேதம் சாவி பூச்சி வெட்டு நோய்அழிவு ஆகிய அறுவகை நட்டிகளும் வரிவிதிக்கப் பெற்றில. அழிவாவது, நன்றாய் விளைந்தும் கள்வராலும் பகை வராலும் விலங்காலும் அழியுண்ட நிலை.

நல்விளைவுக் காலத்தில், வரி கண்டிப்பாய் வாங்கப்பட்டது. ஈராண்டாக வரி செலுத்தாதார் நிலமுழுதும் பறிமுதல் செய்யப் பட்டது. தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த ஓரூரில், பஞ்சக் கொடுமை யால் குடிபோன மக்களின் நிலத்திற்காக, ஊரவையார் ஊர்ப் பொதுநிலத்தைக் கோயிற்கு விற்று வந்த பணத்தைக்கொண்டு, வரி செலுத்தினர் என்னுங் கல்வெட்டுச் செய்தியினின்று, சில அரசர் காலத்தில் பஞ்சத்தினாற் பயிரிடப்படா நிலத்திற்கும் வரி வாங்கப் பட்டமை அறியலாம்.

பிசிராந்தையார் பாடிய "காய்நெல் லறுத்து" என்னும் புறப்பாட்டால் (184) நல்லரசர் காலத்திலும் கடுந்தண்டலாளர் இருந்து, குடிகளை வருத்தியமை அறியப்படும்.

வரிப்பளுவைக் குடிகள் தாங்கமுடியாதபடி கடுவரி விதிக்கப் படுங் காலத்தில், குடிகள் முறையிடுவதும், அரசன் வரிவீதத்தை மாற்றி யமைப்பதும் உண்டு. வரிப்பளுவினாலோ பஞ்சத்தினாலோ ஓர் ஊர் முழுதும் குடிபோயின், அவ் வூருக்குரிய வரியை அவ் வூரைக் கொண்ட நாடு ஏற்றுக்கொள்ளும். அவ்வூர், அண்மையி லுள்ள தெய்வத்திற்கு நாடு செழிக்கக் காணிக்கை செலுத்துமாறு, ஓரிரு சல்வரிடத்தில் ஒப்படைக்கப்படும். ஒப்படைக்கப்படும். இத்தகைய நிகழ்ச்சி, மாறவர்மன் குலசேகரன் ஆட்சியில், திருச்சிராப்ள்ளி மாவட்டத் தைச் சேர்ந்த மருதூரில் நிகழ்ந்தது?

அரசன் வலியற்ற காலத்தில், அரசனுக்கடங்காத நாட்டதிகாரி கள், தம் கண்காணிப்பிற்குட்பட்ட நாட்டு வரியைத் தாம் பயன்படுத்திக் கொள்வதுடன் வரையிறந்த கடுவரி விதிப்பதுமுண்டு. அன்று குடிகள் உள்ளதுரியதெல்லாம் விற்றுக்கொடுக்க நேரும்.

3

வரிதண்டும் இடத்திற்கு நிலைக்களம் என்று பெயர் தலை நகரல்லாத வூர்களிலும் நகர்களிலும் தண்டலாளரால் தண்டப் பட்ட காசுங் கூலமுமாகிய இருவகைப் பொருள்களும், முதலாவது

2. P. K. p. 220.

3. லக்களத்தார் என்னும் பெயர் உடன்கூட்டத்தைக் குறிப்பதாக. H. A.I. S. I. கூறும் (p.120).