உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




70

பழந்தமிழாட்சி

நாட்டுப் பண்டாரம் என்னும் ஊர்ப் பண்டாரத்திற்சேர்க்கப்படும். நாட்டிலாயினும், தலைநகரிலாயினும், பண்டாரத்தை மேற் பார்ப்பவன் பண்டாரக் கண்காணி எனப்படுவன். பொருள்களை அளப்பதற்கும் நிறுப்பதற்கும், பண்டார நாழி என்றும் பண்டாரக்கல் என்றும் அரசமுத்திரையிட்ட படியும் நிறை கல்லும் அங்கிருக்கும். களஞ்சியம் என்றும் கருவூலம் என்றும் பண்டாரம் இருபகுதியதாகும். முன்னதில் கூலமும் பின்னதில் காசும் சேர்க்கப்படும். களஞ்சியத்திற்குக் கொட்டாரம் (கொட்டகாரம்) என்றும் பெயருண்டு. ஆண்டுதோறும், ஊர்ப்பண்டாரத்தில் சேர்க்கப்பட்டுள்ளவற்றில் செலவுபோக எஞ்சிய வெல்லாம், தலைநகரிலுள்ள மூலபண்டாரத்திற்கனுப்பப்பெறும்.

நாட்டுப்புறத்தூர்களிலும் தலைநகரிலும் தண்டப்படும் வரிகட் கெல்லாம், தலைநகரிலுள்ள வரியதிகாரிகளால் வசதியாகக் கணக்கு வைக்கப்பட்டிருந்தது. நிலங்களின் தரங்கள் குறிக்கப்பட் டிருக்கும் புத்தகம் தரவுசாத்து என்றும், நிலவரிக் கணக்கைக் குறிக்கும் புத்தகம் வரிப் பொத்தகம் என்றும், பிற வரிக்கணக்கைக் குறிக்கும் புத்தகம் புரவுவரி என்றும், எல்லா வரிகளையும் குறிக்கும் புத்தகம் அடங்கல் என்றும், செலுத்தப்பட்ட வரித்தொகைகளைக் குறிக்கும் புத்தகம் வரியிலீடு என்றும் பெயர் பெற்றிருந்தன. வரிப்பொத்தகம் வரியிலீடு என்னும் புக்தகப்பெயர்கள் அவற்றிற்குப் பொறுப்பான அதிகாரிகளையுங் குறிக்கும்.

அரசியல் வருமானமும் குடிகள் வருமானமும் சேர்ந்த நாட்டு வருமானத்தைப் (National Income) பெருக்குதற்குரிய பொருளாதாரம், அக்காலத்தில் இயற்றல் (Organization), ஈட்டல் (Collection), காத்தல் (Protection,) வகுத்தல் (Distribution) என்னும் நான்கு தலைப்பிற் கவனிக்கப் பெற்றது. இவை அரசனுக்கும் குடிகளுக்கும் பொதுவாதலின், இவற்றுள் ஒவ்வொன்றும் அரசனுக்குரியதும் குடும்பத்தலைவனுக் குரியதுமாக இவ் விருபாற் படுமாயினும், அரசியலைப்பற்றிக் கூறிவந்த இந் நூலில், அரசனுக்குரிய பகுதிகளே கூறப்படற் குரியன.

இயற்றலாவது, மேன்மேலும், பொருள்கள் வரும் வழிகளை அமைத்தல் (Organization of resources),பொருள்களாவன நெல், மருந்து, பருத்தி, பொன், மணி, கோழி, ஆடு, மாடு, குதிரை, யானை முதலியன. அவை வரும் வழிகளாவன, பகைவரைக் கொள்ளையடித்தலும், பிற

4. இயற்றலும் மீட்டலும் காத்தலும் காத்த

வகுத்தலும் வல்ல தரசு.'

(குறள்.385)