உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பொருளாதாரம்

71

நாடுகளைக் கைப்பற்றித் திறைகோடலும், தன் நாட்டையும் குடிகளையும் காத்தலும் முதலாயின.

ஈட்டலாவது, அமைக்கப்பட்ட வருவாய்களினின்று வரும் பொருள்களை மூலபண்டாரத்திற் சேர்த்தல்.

காத்தலாவது, அங்ஙனஞ் சேர்க்கப்பட்ட பொருள்களைப் பகைவர் கள்வர் சுற்றத்தார் அரசியல் வினைஞர் ஆகியவர் கவராமற் காத்தல்.

வகுத்தலாவது, அங்ஙனங் காக்கப்பட்ட பொருள்களை அறம் பொரு ளின்பங்களின் பொருட்டுச் செலவிடல். கடவுள், அந்தணர், அடியார். வறியார், உறுப்பறையர், வழிப்போக்கர் முதலியோர்க்குச் செலவிடுவது அறப்பொருட்டும்; பல்வகைப் புலவர்க்கும், கலைஞர்க்கும், அரசியல் வினைஞர்க்கும், படைக்கும், அரணுக்கம், அரசவுறவிற்கும், போருக்கும் செலவிடுவது பொருட்பொருட்டும், தேவியர்க்கும் சிறந்த வூணுடைக்கும், அணிகலத்திற்கும், இசைக் கூத்திற்கும், மாளிகை செய்குன்று இலவந்திகைச் சோலை முதலிய வற்றிற்குஞ் செலவிடுவது இன்பப்பொருட்டும் ஆகும்.

கரிகால் வளவன், சேரன் செங்குட்டுவன், முதலாம் இராச ராசன், முதலாம் இராசேந்திரன், முதற் குலோத்துங்கன் முதலிய பேரரசர் பிறநாடுகளை வென்று கொண்ட கொண்டியுந் திறயைங் கொஞ்ச நஞ்சமல்ல.

அரண்மனைச் செலவும் அரசியற் செலவும் போர்ச் செலவும் போக, எஞ்சிய பொற்காசுகளும், மணிகளும் கருவூலத்திற் போற்றப்பெறும். மதுரையில் குலசேகர பாண்டியன் கருவூலம் 1200 கோடித் தினாரம் என்னும் பொற்காசுகளையும், சொல்லாற் குறிக் கொணாப் பன்மணிக் குவியல்களையுங் கொண்டிருந்தது.

5. Pandyan Kingdom, P.196