உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




11

அளவைகள்

பழந்தமிழாட்சியிற் பயன்படுத்தப்பட்ட அளவைகள், பெரும் பாலும், இக்காலத்துள்ள தமிழ் அளவைகளே. அவை எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என நால்வகைப்படும்.

(1) எண்ணலளவை: எண்ணலளவை, சிற்றிலக்கம் பேரிலக்கம் என இருவகை. அரை கால் அரைக்கால் வீசம் (மாகாணி) முதலிய பின்னவெண்கள் சிற்றிலக்கமும், ஒன்று இரண்டு மூன்று முதலிய முழுவெண்கள் பேரிலக்கமும் ஆகும். சிற்றிலக்கத்தில், கீழ்வாயிலக்க மென்றும் மேல்வாயிலக்கமென்றும் இருவகையுண்டு. கீழரை 1/640, கீழ்க்கால் 1/1280, கீழரைக்கால் 1/2560, கீழ்வீசம் 1/5120, முதலியன கீழ்வாய்ச் சிற்றிலக்கமும், மேலரை (அரை), மேற்கால் (கால்), மேலரைக்கால் (அரைக்கால்), மேல்வீசம் (வீசம்) முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமுமாகும். கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தொடு ஒப்புநோக்கியே, அரை கால் அரைக்கால் முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமெனப்படும். மேல்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண் மேல் முந்திரி என்னும் முந்திரி (1/320) யும், கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண் கீழ்முந்திரி (1/102,1/400)யும் ஆகும்.

(2) எடுத்தலளவை: எடுத்தல் என்பது எடுத்து நிறுத்தல். எடுத்தலளவையில் பொன்னும் மணியும் நிறுக்க ஒன்றும், பிற பொருள்களை நிறுக்க ஒன்றுமாக இருவகையுண்டு. பொன்நிறை யளவைக்குப் பொன்னிலக்கம் என்று பெயர். பொன் ஏராளமா யிருப்பின், அதுவும் பிற பொருள்போல் நிறுக்கப்படும்.

கீழ்வருவருவது பொன்னளவை:

1 குன்றிமணி

1மஞ்சாடி

4 நெல்

2

குன்றிமணி

2

மஞ்சாடி

10

வல்லம்

1 கழஞ்சு (1/6 அவுன்சு)

1வல்லம் (பணத்தூக்கம்)