உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




அளவைகள்

கீழ்வருவது பிறபொருள்ளவை :

-

-

4

கஃசு

8

பலம்

5

சேர்

21/2

வீசை

-

8

வீசை

20

மணங்கு

1 பலம் (தொடி) 1 சேர்

1 வீசை

1 துலாம் (கா, தூக்கு, நிறை)

1 மணங்கு

1 கண்டி (பாரம்)

73

சிலவிடங்களில் 5 வீசை கொண்டது ஒரு துலாமாக விருந்தது. அரசமுத்திரை யிட்ட அளவுக்கல், குடிஞைக்கள், பாடிக்கல், பண்டாரக்கல் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பட்டது. நகரங்களில் அது நகரக்கல் எனப்பட்டது. பேரளவான பொன்னை நிறுக்க ஆணிக்கல் என்னும் நிறைகல் இருந்தது. மிகப் பேரளவான பொன் துலாம் கணக்காக நிறுக்கப்பெற்றது.

(3) முகத்தலளவை: முகந்தளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும் சிறந்ததாகவுமிருத்தல்பற்றி, முகத்தல ளவை நெல்லிலக்கம் எனப்படும்.

கீழ்வருவது முகத்தலளவை

பிடி ஆழாக்கு உழக்கு

2 செவிடு

4 செவிடு

1

2 ஆழாக்கு

1

2 உழக்கு

1

உரி

2 உரி

1

நாழி

8 நாழி

1

2 குறுணி

1

பதக்கு

2 பதக்கு

1

3 தூணி

1

கலம்

400 குறுணி

குறுணி(மரக்கால்)

தூணி(காடி)

1 கரிசை (பறை)

அரசு முத்திரையிட்ட அளவை நாழியும் மரக்காலும், அரச பண்டாரத்தில் அரசன் பெயரையும், கோயிற் பண்டாரத்தில் தெய்வப் பெயரையும் தாங்கியிருந்தன. சோழாந்தகன் நாழி அருண்மொழித் தேவன் மரக்கால் என்பன அரசன் பெயரையும், ஆடவல்லான் மரக்கால், செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடையான் மரக்கால் என்பன தெய்வப் பெயரையும் தாங்கியவையாகும்.

இனி, ஒவ்வொரு நாட்டிற்கும் சிறப்பான பெரு முகத்தலளவும் உண்டு. பாண்டிநாட்டில் கோட்டை (21 மரக்கால்) என்பதும்