உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 27.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

பழந்தமிழாட்சி

வடசோழநாட்டில் புட்டி (40 மரக்கால்) என்பதும் பெருமுகத் தலளவாம்.

(4) நீட்டலளவை: நீட்டலளவை, வழியளவையும் நிலவள வையும் என இருவகைப்படும். இவற்றுள் நிலவளவை குழிக் கணக்கு எனப்படும்.

வழியளவை வருமாறு:

-

8 தோரை (நெல்) 1 விரல்

12 விரல்

2 சாண்

4 முழம் 2000 தண்டம்

2 குரோசம் 71/2 நாழிகைவழி

-

குழியளவை வருமாறு:

16 சாண்

18 கோல்

100 குழி

240 குழி

20 LDIT

1 சாண்

1 முழம்

1 பாகம் அல்லது தண்டம்

1 குரோசம் (2 1/4 மைல்)

1யோசனை

1 காதம் (10 மைல்)

1 கோல்

1 குழி

1மா

1 பாடகம்

1 வேலி

செய் என்று ஒரு நில அளவு சங்ககாலத்திலிருந்தது.

நிலவரியைத் துல்லியமாய் விதித்தற் பொருட்டு, சோழப்பெரு நாடு முழுமையும், முதலாம் இராசராசன் காலத்தில் ஒரு முறையும், முதற் குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும், மூன்றாங் குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும் அளக்கப்பட்டது. அவ் வளவையை நடத்தின அதிகாரி உலகளந்தான் எனப்பட்டான். அவன் கையாண்ட அளவுகோல் உலகளந்த கோல் எனப்பட்டது.

எல்லை மாறும்போதெல்லாம் வளநாடுகளும் நாடுகளும் அளக்கப்பெறும். அவற்றை யளக்குங் கோல் இறையிறுக்குங் கோல் எனப்பெறும். குடிதாங்கிக் கோல் என்றும் ஓர் அளவுகோல் முன்காலத்திருந்தது.

நில அளவையில், முந்திய அதிகாரத்திற் கூறிய ஊர்ப் பொது நிலங்களெல்லாம் விட்டுவிடப்படும். நிலங்கள் மிக நுட்பமாக