உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




100

-

திரவிடத் தாய்

3. தொகுத்தல் : திருப்பு திப்பு; திருத்து தித்து; உருண்டை - உண்ட; விருந்து விந்து; சுருட்டு - சுட்ட; மருந்து - மந்து; வணக்கு (வளை) - வங்கு; காய்ச்சு - காச்சு.

-

4.இலக்கணப்போலி (Transposition or Metathesis) : அவன் - வாடு; அவர் - வாரு, காரு; இவன் - வீடு ; இவர் வீரு; இலது - லேது; நாம் மனமு; அறை (கல்) - ராய்; உள் - லோ; ஆக -கா. எழுது - டெப்பதி; அரசு - ராஜு; எழு - லெய்.

அவன் என்பதிலுள்ள அவ் என்னும் பகுதி வ் + அ என்று மாறிப் பின்பு னகர வீறு டகர வீறாய் வாடு என்னும் வடிவம் பிறந்தது. இங்ஙனமே பிறவும்.

சில தெலுங்குச் சொற்கள் முதல் வேற்றுமையில் திரியாதிருந்து பிற வேற்றுமையில் திரியும்.

எ-டு:

மு.வே.பி.வே.

மு.வே.

பி.வே.

அதி

தானி

அவி

வாட்டி

இதி

தீனி

இவி

வீட்டி

ஏதி

தேனி

ஏவி

வேட்டி

5. உயிரிசைவு மாற்றம் (Harmonious Sequence of Vowels) : சொற்களிலுள்ள உயிர்கள் முன் பின் வரும் உயிர்களுக் கேற்றபடி மாறுதல் உயிரிசைவுமாற்றம் எனப்படும். தமிழில் இ ஈ ஏ ஐ என்பவற்றுள் ஒன்றை யிறுதியாகக்கொண்ட பெயர்களின் 4ஆம் வேற்றுமை உருபு 'கி' எனத் திரிந்தும், பிறவீற்றைக் கொண்ட பெயர்களில் 'கு' எனத் திரியாதும், எனத் திரியாதும், உலக வழக்கில் வழங்குகின்றன.

எ-டு: கிளிக்கி, கடைக்கி, வீட்டுக்கு, பலாவுக்கு.

இங்ஙனமே தெலுங்கில் கத்தி என்பது பன்மையில் கத்துலு என்று திரியும். பதில் திகில் று என்பன முறையே பதுலு திகுலு என் று திரியும். சிறியிலை, பொதியில், அடிசில், கோயில் என்னும் தமிழ்ச்சொற்களும் இம் முறை பற்றியனவே.

ம்