உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிவு

இதுகாறுங் கூறியவற்றால், தமிழல் - திரவிடமொழிகள் உயிரும் உடம்பும் போன்ற அடிப்படையும் முக்கியமுமான பகுதிகளிளெல்லாம் தமிழேயென்றும், ஆடையும் அணியும் போன்ற மேற்புறவணியில் மட்டும் ஆரியந் தழுவினவென்றும், அவ் வாரியமும் (அவை) தமிழைத் தழுவுங்கால் வேண்டாததே யென்றும், வடமொழியைத் தமிழல் திரவிடத்தின் தாயெனக் கூறுவது பெரிதோர் ஏமாற்றமென்றும் தெரிந்துகொள்க.

-

திரவிடச் சொற்களுட் சிலவற்றின் இயற்கை வடி வம் தமிழல் - திரவிட மொழிகளிலேயே இருப்பதுண்மையாயினும், அவை மிகமிகச் சிறுபான்மையவென்றும், அதுவுங் குடியேற்றப் பாதுகாப்பின்பாற் படுமென்றும் நூற்றுக்குத் தொண்ணூறு வீதம் திரவிடச் சொல் வேர்கள் தமிழிலேயே உள்ளனவென்றும் அறிதல் வேண்டும் தமிழல் - திரவிட மொழிகளின் மூவிடப்பெயரும் எண்ணுப் பெயருமே இவ் வுண்மையைத் தெரிவிக்கப் போதிய சான்றாகும்.

குடியேற்றப் பாதுகாப்பான ஒரு சிறு பகுதியால் தமிழின் தாய்மை குன்றிவிடாது. சில சூழ்ச்சிப்பொறிகளின் பழைய அமைப்புகள் இன்று கீழ்நாட்டில்தான் உள்ளன. இதனால், மேனாட்டார் கீழ்நாட்டாரிடமிருந்து பொறிக்கலையைக் கற்றார் என்றாகாது. இங்ஙனமே குடியேற்றப் பாதுகாப்பும்.

தமிழ் வாழ்க!

(முற்றும்)