உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை

21

கலப்பின்றி அவர் பேசும் சொற்களும் இயற்றிய நூல்களும் திரவிடமே யாதலானும், எல்லாத் திரவிட மொழிகளும் சேர்ந்தே முழுத்திரவிடமாகும். திரவிட மொழிகள் பலவாயினும், அவற்றுள், தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் என்னும் நான்குமே சிறந்தனவாகும்.

திரவிடர்க்குச் சிறப்பாக வுரிய தூய-பழைய-பல துறைப்பட்ட- யர்நிலை இலக்கியம் தமிழிலேயே யிருத்தலானும், தமிழல்-திரவிட மொழிகளில் உள்ள இலக்கியங்கள் பிற்பட்டனவும் பலதுறைப் படாதனவும் பெரும்பாலும் ஆரியச் சார்புள்ளனவும் கழக நூல்நிலைக்குத் தாழ்ந்தனவுமாயிருத்தலானும், தமிழரல்-திரவிடரெல்லாம் தத்தம் இலக்கியத்தைப் போன்றே பிற திரவிட இலக்கியங்களையும் பேணுவதுடன் தமிழிலக்கியத்தையே சிறப்பாகப் பேணிக் கற்றற்குரியர். தமிழில் வழங்காத சில தூய, சிறந்த திரவிடச் சொற்கள் பிற திரவிட மொழிகளில் வழங்குதலின், தமிழரும் பிற திரவிட மொழிகளைப் பேணிக் கற்றற்குரியர். திரவிட மொழிகளிலுள்ள திரவிடச் சொன்னூற்கலை யனைத்தும் திரவிடரெல்லார்க்கும் பொதுவுடைமையென்றறிதல் வேண்டும். தமிழும் பிற திரவிடமும் முறையே இலக்கியத்திலும் சொல்லிலும் ஒன்றுக்கொன்று உதவும் நிலை தாயும் மக்களும் போல ஆதலின், தமிழரல்-திராவிடர் இனிமேலாயினும் ஆரியச் சார்பை இயன்றவரை அகற்றிவிட்டுத் தமிழைத் தழுவுவாராக.

ஆரியக் கலப்பினாலேயே மாபெருந் திரவிட நாடு சீர் குலைந்து சின்னபின்னமாய்ச் சிதைந்து கிடக்கின்றதென்க. வைத்தூற்றி (Funnel) என்னும் மலையாளச் சொல்லும், கெம்பு என்னும் கன்னடச் சொல்லும், எச்சரிக்கை என்னும் கன்னட தெலுங்குச் சொல்லும் தமிழுக்கு இன்றியமையாதனவே.

"தெவுக்கொளற் பொருட்டே.

22

(தொல்.345)

செய்யுன்னோன் (செய்நன்) என்னும் மலையாளச் சொல்லையும், தெகு (தெவு) என்னும் கன்னடச் சொல்லையும், அட்ட (அட்டை) என்னும் கன்னட தெலுங்குச் சொல்லையும்', அறியும்போதே, அச் சொற்கட்குத் தமிழிற் கூறும் பொருள் நன்றாய் விளங்குகின்றது; வழுவுந் தெரிகின்றது.

1. 'அட்டையாடல்' என்னுந் தொடரில், அட்டை யென்பது தலையில்லா முண்டத்தைக் குறிக்கும். அட்ட அல்லது அட்டெ என்னும் கன்னட தெலுங்குச் சொல்லுக்கு இதுவே பொருள்.