உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




36

திரவிடத் தாய்

தொன்றுதொட்டுச் சேரநாட்டு மெலித்தல் திரிபு சொற்கள் சில சோழ பாண்டி நாடுகளிலும் இருவகை வழக்கிலும் வழங்கி வருகின்றன.

எ-டு: 'திரிநவும்' (தொல்.83) பழனி, (புறம் 113) பழுனிய (மணி,328) 'அறியுனன்' (புறம் 134) (திரிகின்ற திரிகுன்ன - திரியுன்ன - திரியுன-திரின-திரிந) ‘பழுத்து - பழுன்னு - பழுன்னு' - பழுநி - பழுதி, மகிழ்கின்றான் - மகிழுன்னான் - மகிழுநன் - மகிழ்நன். வாழ்கின்றான் வாழுன்னான் வாழுநன் - வாழ்நன் - வாணன். இனி, திரியும்

-

-

திரியுன் + அ = திரியுன-திரி - திரிந என்றுமாம். இங்ஙனமே பிறவும், னகரத்தினும் நகரம் முந்தினதெனக் கொள்ளவும் இடமுண்டு. ஆங்கனம் - அங்கனம் - அங்ஙனம் -அன்னணம்.

"ஆஓ வாகும் பெயருமா ருளவே.

ஆயிடன் அறிதல் செய்யு ளுள்ளே

""

என்று கூறியதும் சேரநாட்டிற்கே சிறப்பாய் ஏற்கும்.

(தொல்.680)

இவற்றால், பண்டை முத்தமிழ் நாட்டுத் தொடர்பை வினைமுற்றுகள் பாலீறு பெற்றதையும்

யும், சேரநாட்டு

அறியலாம்.

“....வண்டமி ழிகழ்ந்த

காய்வேற் றடக்கைக் கனகனும் விசையனும்

செங்குட்டு வன்றன் சினவலைப் படுதலும் ”

என்று சிலப்பதிகாரத்திலும்,

66

“வடதிசை யெல்லை யிமய மாகத்

தென்னங் குமரியொ டாயிடை யரசர்

முரசுடைப் பெருஞ்சமந் ததைய வார்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல்கவி னழித்த

போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ"

(பதித்.43)

என்று பதிற்றுப்பத்திலும் பாடப்பட்டுள்ள சேர நாட்டுச் சீரிய ம றம் இன்று ஆரிய அடிமைப்பட்டு அணுவளவுத் தமிழுணர்ச்சி யின்றிக் கிடப்பது நினைக்குந்தோறும் நெஞ்சைப் புண் படுத்துவதா யிருக்கின்றது.