உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

(6) கொச்சைத் திரிவும் தொகுத்தலும்

திரவிடத் தாய்

எ-டு: உள்ள -ஒள்ள, மலை - மல, அகற்றுக-அகத்துக, இரு- இரி, புறா -ப்ராவு, கனா கினாவு, வேண்டும் - வேணம், செய்யவேண்டும் -செய்யேண்டு, போக வேண்டும் போகேணம்.

(7) றகர ரகர வேறுபாடின்மை

-

எ-டு: உறவு உரவு.

-

(8) நிகழ்கால வினையெச்சத்திற்குப் பதிலாக 'வான்' 'பான்' ஈற்று வினையெச்சங்களும் அவற்றின் திரிபுகளும் வழங்கல். -டு: குடிப்பான் = குடிக்க, நடப்பான் - நடக்கான் = நடக்க, வருவான் = வர.

(9) சிறப்புச் சொற்கள் பொதுப் பொருளில் வழங்கல்

எ-டு: வெள்ளம் (புதுப் பெருக்கு நீர்), = நீர். மூரி (கிழஎருது) = எருது, நோக்கு (கூர்ந்து பார்) = பார்.

(10) சொற்களை ஒருமருங்கு பற்றிய பொருளில் வழங்கல்

எ-டு: அதே

=

வலிய = பெரிய.

ஆம், வளரே = மிக,மதி

=

போதும்;

(11) ஒருபொருட் பல சொற்களில் தமிழில் வழங்காத ஒன்றை வழங்கல்

எ-டு: சொல் (த.) - பறை (ம.); கூப்பிடு (த.) -விளி (ம.)

(12) ஆய் என் என்னு ம் வினையெச்ச வீறு ஆயிட்டு என வழங்கல்

எ-டு: சிவப்பாய் -சிவப்பாயிட்டு.

(13) நெடுஞ்சுட்டு வழக்கு வீழாமை

எ-டு: ஆயாள் (அவ் ஆள்), ஈ மூரி (இம் மூரி)

(14) ஏவல் வினைகள் பெரும்பாலும் வியங்கோள் வடி வில் வழங்கல்.

எ-டு: தா-தரிக, தர.