உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலையாளம்

(15) துணை வினை வேறுபாடு

39

எ-டு: பறையுவான் கழியும் (சொல்ல முடியும்), பறையுவான் கழியுன்னில்ல (சொல்லமுடியாது).

(16) செய்யும் என்னும் முற்று மூவிடத்தும் வழங்கல்.

எ-டு: ஞான், நீ, அவன் போகும்.

(17) றன்னகரம் தந்நகரமாக எழுதப்படல்

(18) வழக்கற்ற சொல் வழங்கல்

எ-டு: கைநீட்டக் காசு, தம்பிராட்டி.

(19) புதுச் சொற்கள்

எ-டு: மேடி = வாங்கு, வெடிப்பி = துப்புரவாக்கு. = =

(20)வினைமரபு வேறுபாடு

எ-டு: முட்ட புழுங்ஙக (அவிக்க), விளக்கு கெடுக்க (அணைக்க), முட்டுக் குத்துக (கொடுக்க, காலுற முறிக்க (வெட்டுக.), மடங்ஙி ( திரும்பி) வருக.

குறிப்பு: சேரநாட்டுக் கொடுந்தமிழாகிய மலையாளத்திலுள்ள இருவகைத் தமிழ்ச்சொற்களையும் வழக்கு வீழ்த்தற்கும் மலையாளத்தார் தமிழ்ச் சொற்களைக் கடன்கொண்டு அதனால் அவர்க்கும் தமிழர்க்கும் தொடர்பு ஏற்படாதபடியும், ஆரியர் வடசொற்களை மிகுதியாய்க் கலந்து மலையாளத்தைக் கெடுத்துத் தமிழுக்கு மிக அயன்மைப்படுத்திவிட்டனர்.

மலையாளச் சொல் வரிசைகள் (i) பெயர்ச் சொற்கள்

1. மூவிடப்பெயர்

தன்மை

முன்னிலை

படர்க்கை

தற்சுட்டு

ஒருமை: ஞான்

நீ

ܩܧ

அவன், இவன்

தான்

பன்மை: நாம் நம்மள் ளுங்கள்

அவள், இவள்

அது, இது

நிங்கள்

அவர், இவர் அவ, இவ

தங்ஙள்

தாங்ஙள்

தாங்கள்