உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




40

2. வினாப் பெயர்

ஆண்

பெண்

பொது

ஒருமை: எவன்

எவள்

ஆர்

பனமை:

எவர்,

யார்

யாவர்

திரவிடத் தாய்

அஃறிணை

எது, யாது, எந்து

எவ,யாவ

என்னது (த.) = எந்து (ம.)

3. முறைப் பெயர்

அப்பன், அம்ம, அம்மாயி (பாட்டி), மகன், மகள், மருமகன், மருமகள், பேரன் முதலிய முறைப்பெயர்கள் செந்தமிழ்ச் சொற்களாகும்.

மூத்தச்சன், மூத்தப்பன், பேரப்பன்; மூத்தம்ம, மூத்தச்சி; வலியச்சன் (பெரியப்பன்), வலியப்பன், இளையப்பன் குஞ்ஞச்சன் (சிற்றப்பன்), பெண்ணப்பன் (மாமன்), பெண்ணம்ம (மாமி), கெட்டியவன் (கணவன்), கெட்டியவள் (மனைவி) முதலிய முறைப்பெயர்கள் கொடுந் தமிழ்ச் சொற்களாகும்.

ஜ்யேஷ்டன், ஜ்யேஷ்டத்தி, அனுஜன், அனுஜத்தி முதலிய வடசொற் பெயர்கள் வழக்கூன்றியதால், அண்ணன், அக்கை, தம்பி, தங்கை முதலிய செந்தமிழ்ப் பெயர்கள் மலையாளத்தில் வழக்கு வீழ்ந்தன.

அச்சி, அப்பச்சி என்னும் ஒருபான் முறைப்பெயர்கள் செந்தமிழ் நாட்டில் சில குலத்தாரிடை வழங்குகின்றன. இவையும் இவற்றின் ஆண்பால் வடிவங்களான அச்சன், அப்பச்சன் என்பனவும் ஒருங்கே மலையாள நாட்டில்தான் வழங்குகின்றன.

குறிப்பு: அத்தன்-அச்சன், அத்தி-அச்சி, த-ச, போலி.

4. மக்கட் பெயர்

அடியார், அப்பக்காரன், அப்பட்டன், ஆள், ஆள் கொல்லி, இடயன், இரப்பாளி, இளையவன், உடயவன், ஊமன். எளியவன், கணியான், கள்ளன், கன்னியாள், குட்டி (பிள்ளை), குடியன், குருடன்,கூலிக்காரன், கொல்லன், சக்காள் (செக்கான்), செவிடன், செறியவன் (சிறியவன்), தச்சன், தாந்தோன்னி (தான்தோன்றி),