உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

திரவிடத் தாய் பயறு, உருளக்கிழங்கு, முந்திரிங்ங (முந்திரிகை), ஞாறு (நாற்று), கள (களை), சூரல் = பிரம்பு), வேம்பு, ஞாணல், ஞாவல் (நாவல்) முதலியன.

10. கருவிப்பெயர்

அரம், ஆணி, ஈர்ச்சவாள், உரலு, உலக்க (உலக்கை), ஏத்தம் (ஏற்றம்), உளி, கத்தி, கத்திரி, கரண்டி, கோட்டு, (கொட்டு), கோடாலி, சக்கு (செக்கு), சாட்ட (சாட்டை), சுத்திக (சுத்திகை), சுழிக்குற்றி, சூலம், துடுப்பு, துருத்தி, நுகம், மழு, முள், மூலமட்டம், வாள், வில், குண்டல் (தூண்டில்), நங்கூரம் முதலியன.

11. ஐம்பூதப் பெயர்

நிலம், வெள்ளம், தீ, காற்று, விண்ணு.

12. உலோகப் பெயர்

இரிப்பு (இரும்பு), ஈயம், உருக்கு, செம்பு, தகரம், துத்தநாகம், பிச்சள (பித்தனை), பொன், வஜ்ரம் (வயிரம்), வெள்ளி

13. ஊர்திப் பெயர்

ஓடி,ஓடம்,கப்பல், தேர், தோணி, படகு, வண்டி முதலியன. 14, உணவுப் பெயர்

அரி (அரிசி), அப்பம், இர (இரை), இறச்சி (இறைச்சி), உப்பு, உற (உறை மோர்), ஊண், எண்ண (எண்ணெய்), கஞ்ஞி (கஞ்சி), கடுகு, கறி, சோறு, தயிர், தவிடு, தீன், தேன், தை (நெய்), பலஹாரம் (பலகாரம்), பால், மசால (மசாலை), மருன்னு (மருந்து), முட்ட (முட்டை), முளகு தண்ணி (மிளகு தண்ணீர்), மோர், வெண்ண (வெண்ணெய்) முதலியன.

15. ஆடையணிப் பெயர்

டுப்பு, கம்பிளி (கம்பளி), கால் சட்ட, காலுற (காலுறை), குப்பாயம், குடுத்த (குடித்துணி), சிலம்பு, செரிப்பு (செருப்பு), தலக்கெட்டு, தலப்பாவு (தலைப்பாகை), துணி, துவால (துவாலை), பட்டு, பாவாட (பாவாடை), புடவ (புடவை), மோதிரம், மூக்குத்தி, வள (வளை) முதலியன.