உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 28.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




மலையாளம்

16. தட்டுமுட்டுப் பெயர்

43

அண (அணை), கயிறு, கலம், கிண்டி (கெண்டி), குட (குடை), கட்டி, சாக்கு, தொட்டி, பலக (பலகை), பாய், மேச (மேசை), விளக்கு, சீப்பு, கண்ணாடி, புஸ்தகம் (பொத்தகம்), கடியாரம், தட்டு, கிண்ணம், செம்பு, பொக்கணம், பெட்டி, முறம் முதலியன.

17. இடப் பெயர்

அகம், அங்ஙாடி (அங்காடி), இட (இடம்), இற (இறவு), உல (உலை), எழுத்துப்பள்ளி (பள்ளிக்கூடம்), கடல், கர (கரை), கல்லற (கல்லறை), காடு, கிணறு, கிழக்கு, குடி (= வீடு), குடில், குழி, குளம், கோட்ட (கோட்டை), சுவர், தீவு, துறமுகம் (துறைமுகம்), தெக்கு, தெரு, தோட்டம், நாடு, பட்டணம், பாற (பாறை), புறம், மல (மலை), மதிலு, மாளிக (மாளிகை), முற்றம், மூல (மூலை), லோகம் (உலகம்), வடக்கு, வயல், வழி, வாதில் (வாசல்), வானம், வீடு, குண்டு, (அறை), சேரி, இல்லம், கழனி, கேணி.

18. காலப் பெயர்

காலம், சமயம், நாள், நேரம், பக்கம் (திதி), பகல், போழ் (போழ்து), மண்டலம், மணி, மாசம் (மாதம்), ராத்திரி (இராத்திரி), ராவு (இரா), ஞான்னு (ஞான்று), முதலியன.

19. சினைப் பெயர்

=

இதள் (இதழ்), இல (இலை), ஈரல், உடல், எச்சில், ஒல (ஓலை), கண்ணு, கழுத்து, காம்பு, காய், கால், கை, குடல், குளம்பு, கொம்பு, சிரட்ட (சிரட்டை), சிறகு, செகிள், செதும்பல், செவி, சோர (சோரி அரத்தம்), சூச (சூசை), தண்டு, தல (தலை), தல முடி, தளிர், துட (தொடை), தும்பிக்கை, தூவல் (தூவு), தோல், தோள், நரம்பு, நாடி,நார்,நாவு, நெஞ்ஞு ( நெஞ்சு),படம்,பல்லு, பழம், பாள (பாளை), பித்தம், பூவி, மயிர், முகம், முல (முலை), முள், முள, (முளை), முழங்காலு, மீச (மீசை), முட்டு, மூக்கு, மொட்டு, ரத்தம் (அரத்தம்), வயிறு, வால், பித்து, விரல், வேர், அலர்.

20. பல்பொருட் பெயர்

ஊஞ்சல், இடி, ஒலி, மெழுகு, பொடி, பேர்,கூலி, மஷி (மை), சுமடு (சுமை, புக (புகை), மழ (மழை), சேறு, வில (விலை),