உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

தமிழர் மதம்

அமர்த்தி, உருவிலா வழிபாட்டை மேற்கொள்ளல் வேண்டும். உருவ வழிபாடு துறவுநிலைக் கேற்பதன்று.

சிவநெறிச் செலவு, புலான்மறுத்தல், துப்புரவு, ஒழுக்கம் ஆகிய வையே, சிவமடத் துறவியர் ஆசிரியர் இலக்கணமாய் அமைதல் வேண்டும்.

இன்று தி.மு.க. ஆட்சி ஏற்பட்டிருப்பதால், பிராமண வழக்கறி ஞரைப்பற்றி அஞ்ச வேண்டுவதில்லை. பிராமணியத்தினின்று தப்ப முடியாதவர் பிறவியினின்று ஒருகாலும் தப்பமுடியாது. கூரை யேறிக் கோழி பிடிக்கத் தெரியாதவனா கோபுர மேறிக் குடக் கூத்தாடுவான்?

சிவமடங்கள் திருந்தாவிடின், எதிர்காலத்தில், தமிழராட்சி வந்து திருத்தும்; அல்லது பொதுவுடைமை யாட்சிவந்து, மூன்றாங் குலோத்துங்கச் சோழன் காலத்துக் குகையிடி கலகம் போன்ற கிளர்ச்சி யெழும்.

3. சைவசித்தாந்த மகாசமாசச் சிவத்தொண்டு

பிராமணர் மட்டுமன்றி வையாபுரிப் பிள்ளை போன்ற தமிழரும், மெய்கண்டார் இயற்றிய 'சிவஞான போதம்' வடமொழி 'ரௌரவ' ஆகமத்தின் மொழிபெயர்ப்பென்று, நீண்டகாலமாகப் பிதற்றி வந்தனர்.

திரு.ம.பாலசுப்பிரமணிய முதலியார், மறுக்கமுடியாத 120 கரணியங் காட்டி, 'சிவஞான போதம் தமிழ் முதனூலே, மொழி பெயர்ப்பன்று' என்று நாட்டிய அரிய ஆராய்ச்சிச் சுவடியை, சைவ சித்தாந்த மகா சமாசம், 1965ஆம் ஆண்டு தன் வைரவிழா வெளியீடாக வெளியிட்டது, சிவனியரும் தமிழரும் மிகப் பாராட்டி மகிழத்தக்கதொன்றாம்.

4. காஞ்சிக் காமக்கோடிப் பீடச் சங்கராச்சாரியாரின் கரைகடந்த தமிழ்

வெறுப்பு

சில ஆண்டுகட்கு முன், இற்றைக் காஞ்சிச் சங்கராச்சாரியார், ஆண்டாள் திருப்பாவையின் "செய்யா தனசெய்யோம் தீக்குறளை சென்றோதோம்” என்னும் அடியிலுள்ள “தீக்குறளை சென்றோ தோம்” என்னும் தொடருக்கு, தீய திருவள்ளுவரின் குறளை யாங்கள் ஓத மாட்டோம் என்று ஆண்டாள் சொன்னதாகப் பொது மேடை யிற் பொருள் கூறி, தம் தமிழிலக்கண அறியாமையையும் தமிழ் வெறுப்பையும் வடமொழி வெறியையும் ஒருங்கே காட்டினார்.

ஆட்சிமொழிக் காவலர் திரு. கீ. இராமலிங்கனார் ஆச்சாரி யார் மடத்திற்குச் சென்று இதுபற்றி வினவியபோது, ஆச்சரியார்