உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிகழ்நிலையியல்

115

நேரடியாகத் தமிழில் விடையிறுக்காது. தம் அணுக்கத் தொண்டர் தமிழில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு சமற்கிருதத்திலேயே விடை கூறினாராம். "சுவாமிகளுக்கு நன்றாகத் தமிழ் தெரியுமே! தமிழிலேயே எனக்கு நேரடியாய் விடை கூறலாமே!” என்று ஆட்சி மொழிக் காவலர் சொன்னதற்கு, “சுவாமிகள் பூசை வேளையில் நீச பாஷையில் பேசுவதில்லை” என்று அணுக்கத் தொண்டர் மறு மொழி கூறினாராம். எது நீச மொழி என்பதை, 'எது தேவமொழி? என்னும் பகுதியிற் காண்க.

5. அகோபிலம் சீயர் ஆணவம்

முன்பு தருமை வளாகத் தமிழ்க் கல்லூரி முதல்வராக இருந்த வரும், இன்று காஞ்சி ஞானப்பிரகாசர் மடத் தலைவராக இருப்ப வரும் ஆன தமிழத் துறவியார், வடார்க்காடு மாவட்ட முக்கூர் என்னும் சிற்றூரில், தம் இல்லத்தையே மடமாக்கிக் கொண்டு 'அகோபிலம் சீயர்' என இறுமாந்திருக்கும் பிராமணரைப் பார்க்கச் சென்றிருந்தபோது, அப் பிராமணர் "நீ ஒரு சூத்திரன். உனக்குக் காவி கட்ட அதிகாரம் உண்டா? வேதம் படிக்க அதிகாரம் உண்டா?” என்றும் பிறவாறும் திமிரொடு வினவியிருக்கின்றார்.

6. தவத்திருக் குன்றக்குடி அடிகளின் சிவ தமிழ்த்தொண்டு

ஐங்கோவில் வருமானமே யுடையவரேனும், ஆண்டு முழுதும் நாடெங்கும் சுற்றி, மொழித்துறையிலும் மதத்துறையிலும் கற்றார்க் கும் கல்லார்க்கும் நல்லறிவு புகட்டி, ஆரியத் தீங்குகளை அறவே அகற்றி, தமிழர் திருந்திய முறையில் வாழவும் தெய்வத் தமிழில் வழிபடவும், அல்லும் பகலும் அரும்பாடுபட்டு, ஆயிரக்கணக்கான வேலி நிலங்களையுடைய ஏனை மடங்களின் தலைவரினும் சிறந்த பணியாற்றி வரும், தவத்திருக் குன்றக்குடி அடிகளின் தவப்பெருஞ் சிவ தமிழ்த்தொண்டு போற்றிப் புகழத்தக்கதாம்.

7. தி.மு.க. அரசின் திருக்கோவில் தொண்டு

நம்பா மதத்தாரென்று தமிழ்ப் பகைவராலும் அவரடியாரா லும் பழிக்கப்பட்ட தி.மு.க. அரசினர், பழங்கோவில்களைப் புதுக்கியும், திருவிழாக்களைச் சிறப்பாக நடத்தியும், வருமானத்தைப் பெருக்கியும், தமிழரெல்லாரும் நெஞ்சுருகி உண்மையாக வழிபடத் தாய்மொழியில் வழிபாடு செய்வித்தும்; மாந்த ரெல்லாரும் இறைவன் மக்களென்று உணர்ந்து, ஏமாற்றும் ஏற்றத் தாழ்வும் இனப்பகையு மின்றி, எல்லாரும் உடன்பிறப்புப்போல் ஒருமித்து இன்புற்று வாழ, கோவிற் பூசகரை எல்லா வகுப்பினின்றும் தெரிந் தெடுக்கத் திட்டமிட்டும்; இதுவரை வேறெவ்வரசும் செய்யாத முறை