உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

106

திருக்குறள்

தமிழ் மரபுரை


819. கனவினு மின்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு.

(இ-ரை.) சொல்வேறு வினைவேறு பட்டார் தொடர்பு - சொல்லொன்றுஞ் செயலொன்றுமா யிருப்பவரின் நட்பு; கனவினும் இன்னாது - நனவில் மட்டுமன்றிக் கனவில் நினைப்பினும் துன்பந் தருவதாம்.

சொல்வேறு வினைவேறு படுதலாவது சொல்லளவில் நண்பராகவும் செயலளவிற் பகைவராகவு மிருத்தல். மதியொடும் மனச்சான்றொடும் கூடாத தூக்கநிலையிலும் துன்பந்தருமென்று, அதன் கொடுமை கூறியவாறு. எச்சவும்மை தொக்கது. 'மன்', 'ஓ' அசைநிலைகள்.

820. எனைத்துங் குறுகுத லோம்பன் மனைக்கெழீஇ
மன்றிற் பழிப்பார் தொடர்பு.

(இ-ரை.) மனைக் கெழீஇ மன்றில் பழிப்பார் தொடர்பு - இல்லத்தில் தனியே யிருக்கும்போது அன்பர்போல் நட்பாடி, அம்பலத்திற் பலரோடு கூடியிருக்கும்போது பகைவர்போற் பழிகூறுவார் நட்பு; எனைத்தும் குறுகுதல் ஓம்பல் - எள்ளளவுந் தம்மை அணுகாதபடி காத்துக்கொள்க.

தனித்திருக்கும்போது பழிப்பினும் பிறரோடு கூடியிருக்கும்போது புகழ்வதே நல்ல நண்பர் செயலாம். அதற்கு மாறாக விருப்பதொடு கண்முன் துணிந்து முரண்படுவதால், அவர் பகைவரொடு கூடி அழிவுண்டாக்காதவாறு முழு விழிப்புடன் முற்காப்பாக விருக்க வேண்டுமென்பார் 'எனைத்துங் குறுகுதல் ஓம்பல்' என்றார். 'கெழீஇ' இன்னிசை யளபெடை.

அதி.83-கூடா நட்பு

அதாவது, உண்மையிற் பகைவராயிருந்து தமக்கேற்ற காலம் வரும் வரை நண்பர்போல் நடிக்கும் பொ-ந்நட்பு. இது புறத்திற் கூடியிருந்தும் அகத்திற் கூடாதிருத்தலால் கூடாநட் பெனப்பட்டது. இது தீநட்பின் மற்றொரு வகையாதலால் அதன்பின் வைக்கப்பட்டது.

821. சீரிடங் காணி னெறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு.

(இ-ரை.) நேரா நிரந்தவர் நட்பு - அகத்திற் கலவாது புறத்திற் கலந்தொழுகுவாரின் நட்பு: சீர் இடம் காணின் எறிதற்குப் பட்டடை - சிறந்த சமையம் வா-ப்பின் தாக்குவதற்குப் பட்டடைபோல் உதவுவதாம்.