உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தக்க சமையம் வரும்வரை உதவி செ-யும் நண்பர்போல் இருந்து விட்டு அது வந்தவுடன் தாக்குவாரின் நட்பு, அடிப்பதற்கு முன்பெல்லாம் ஒரு கனியஉலோகப் பொருளைத் தாங்குவது போலிருந்து பின்பு அதை ஓங்கியுறைத் தடித்தற்கு உதவும் பட்டடை போன்றிருத்தலால் அதைப் பட்டடை யென்றே சார்த்திக் கூறினார். தீர்விடமென்று பாடமோதி முடியு மிடமென்று மணக்குடவர் உரைப்பது சரியன்று. பட்டுதல் அடித்தல். பட்டுதற்கு அடை பட்டடை.

822. இனம்போன் றினமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும்.

(இ-ரை.) இனம் போன்று இனம் அல்லார் கேண்மை - இனத்தார் போன்றிருந்து உண்மையில் இனத்தார்க்குரிய அன்பில்லாத கரந்த பகைவர் நட்பு; மகளிர் மனம்போல வேறுபடும் - விலைமகளிர் மனம்போல வேறுபடும்.

நட்பு வேறுபடுதலாவது கரந்த பகை வெளிப்படையாதல். மகளிர் என்னும் பொதுச்சொல் இடத்திற்கேற்ப விலைமகளிரைக் குறித்தது. விலை மகளிர் காதல்போலக் கரந்த பகைவர் நட்பு வேறுபடுமென்பதாம். முன்னவர் பன்முறையும் பின்னவர் ஒரு முறையும் வேறுபடுவதே வேற்றுமை.

823. பலநல்ல கற்றக் கடைத்து மனநல்ல
ராகுதன் மாணார்க் கரிது.

(இ-ரை.) பல நல்ல கற்றக் கடைத்தும் - பல நல்ல நூல்களைக் கற்ற போதிலும்; மாணார்க்கு - சிறவாத பகைவர்க்கு; மனம் நல்லவர் ஆகுதல் அரிது - மனத்திருந்தி உண்மை நண்பராகும் தன்மையில்லை.

நல்ல நூல்கள் அறிவைப் பெருக்கி மனக்கோட்டந் தீர்க்கும் இலங்கு நூல்கள்.

"உரத்தின் வளம்பெருக்கி யுள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின்
கனக்கோட்டந் தீர்க்குநூ லஃதேபோல் மாந்தர்

மனக்கோட்டந் தீர்க்குநூல் மாண்பு."

(நன்.பொதுப்.25)

கற்றபின்பும் என்று பொருள்படுதலால் எச்சவும்மை. 'மனநல்லர்' எனச் சினைவினை முதல்வினைமேல் நின்றது. நல்லராகுதல் பகைமை நீங்குதல்.