உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அதி.65 - சொல்வன்மை

அதாவது, அமைச்சன் தன் சூழ்ச்சியை அரசனுக்கு எடுத்துச் சொல்வதில் வல்லவனாதல். மேற்கூறிய அமைச்சிலக்கணங்களுள் ஒன்றான 'ஒருதலையாச் சொல்லலும் வல்லது'(634) என்றதனை விரித்துக் கூறுவதால், இது அமைச்சின் பின் வைக்கப்பட்டது.

641.நாநல மென்னு நலனுடைமை யந்நலம்
யாநலத் துள்ளதூஉ மன்று.

(இ-ரை.) நாநலம் என்னும் நலன் உடைமை - நாநலம் என்று அறி வுடையோரால் உயர்வாகச் சொல்லப்படும் நன்மை அமைச்சர்க்குச் செல்வம் ஆவதாம்; அந் நலம் யா நலத்து உள்ளதும் அன்று - அந் நன்மை வேறு எவ்வகை நற்பேறுகளுள்ளும் அடங்காது தனிப்பட்டதாம்.

நாவின் நலம் நாநலம். அது நாவின் நன்மையும் வன்மையுங் கலந்ததாம். நன்மை பிறருக்கு நன்மை செ-வதும் வன்மை பிறரை வயப்படுத்துவதுமாகும். இப் பேறு தனிப்பட்டதாதலின், 'யாநலத் துள்ளதூஉ மன்று' என்றார். 'உள்ளதூஉம்' இன்னிசை யளபெடை.

642. ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு.

(இ-ரை) ஆக்கமும் கேடும் அதனால் வருதலான் - தன் அரசனுக்கும் அவன் அரசுறுப்புகட்கும் மேம்பாடும் அழிவும் தன் சொல்லால் வருமாதலால்; சொல்லின்கண் சோர்வு காத்து ஓம்பல் – அமைச்சன் தன் சொல்லில் தவறு நேராதவாறு போற்றிக் காக்க.

"முற்படக் கிளத்தல் செ-யுளுள் உரித்தே"

(தொல். கிளவி. 36)

என்பதால், சுட்டுப்பெயர். முன்வந்தது. பிறர் சொல் தவறுபோலாது அமைச் சன் சொல் தவறு நாடு முழுவதற்கும் கேடு விளைக்குமாதலால், 'காத்தோம் பல் சொல்லின்கட் சோர்வு' என்றார். "ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல் லும்', "நாவில் பிறக்கும் நன்மையும் தீமையும்" என்பன பழமொழிகள்.

643. கேட்டார்ப் பிணிக்குந் தகையவா-க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.