(இ-ரை.) கேட்டார்ப் பிணிக்கும் தகை அவா- - நண்பராயிருந்து தாம் சொன்னதை ஏற்றுக்கொண்டவர் பின்பு தம்மைவிட்டுப் பிரியாவாறு வயப்படுத்தும் தன்மைகளை விரும்பித் தழுவி; கேளாரும் வேட்ப மொழிவது - பகைவராயிருந்து தம் சொல்லை ஏற்றுக்கொள்ளாதவரும் பின்பு அப் பகைமை நீங்கி நட்பை விரும்பும் வண்ணம் சொல்வதே; சொல்ஆம் அமைச்சர்க்குரிய சொன்முறையாம்.
கேட்டார்ப் பிணிக்குந் தகைகள்:
"சுருங்கச் சொல்லல் விளங்க வைத்தல்
நவின்றோர்க் கினிமை நன்மொழி புணர்த்தல்
ஓசை யுடைமை ஆழமுடைத் தாதல்
முறையின் வைப்பே உலகமலை யாமை
விழுமியது பயத்தல் விளங்குதா ரணத்த
(நன்.பொதுப்.12)
அவாவுதல் கேட்பாருள்ளத்தை இறுகப் பிணிக்க வேண்டுமென்னும் நோக்கத்தைச் சிறப்பாகக் கொள்ளுதல். கேட்டல் என்னும் வினை ஏற்றுக் கொள்ளற் பொருள் கொள்வதை, சொன்னசொற் கேளாதவன் என்னும் வழக்கு நோக்கியுணர்க. 'அவா-... மொழிவது' என்று முடியும். 'கேட்டார்', 'கேளார்' என்பவற்றிற்கு, வினாவினார் வினாவாதார் என்று மணக்குடவரும் பரிப்பெருமாளும்; நூல் கேட்டார் கேளாதார் என்று காலிங்கரும் உரைப்பர். கேட்டார் என்பதனைக் கேள்வியுடையார் எனினும் அமையும்', 'சொல்லக் கேட்டார் எனினும் அமையும்' என்றும் உரைப்பர் பரிப்பெருமாளர். 'தகைய வா-' என்பதற்கு, தகுதியையுடையவா - என்றும், பண்புகளையுடையவா- என்றும், இயல்பினை யுடையவா- என்றும் உரைப்பின், 'மொழிவன' என்னும் பாடங்கொள்க. 'கேளாரும்' இறந்தது தழுவிய எச்சவும்மை. 'ஆம்' பிரித்துக் கூட்டப்பட்டது.
644. திறனறிந்து சொல்லுக சொல்லை யறனும்
பொருளு மதனினூஉங் கில்.
(இ-ரை.) சொல்லைத் திறன் அறிந்து சொல்லுக சொல்ல வேண்டுவதைச் சொல்லும்பொழுதும் தம் நிலைமையும் கேட்போர் நிலைமையும் செ-தியின் நிலைமையும் அறிந்து அவற்றிற் கேற்பச் சொல்லுக; அதனின் ஊங்கு அறனும் பொருளும் இல் - அங்ஙனஞ் சொல்வதினுஞ் சிறந்த அறவினையும் பொருள்வினையும் இல்லை.