"ஊரங் கணநீ ருரவுநீர் சேர்ந்தக்கால்
பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் – ஓரும்
குலமாட்சி யில்லாருங் குன்றுபோல் நிற்பர்
(நாலடி.175)
என்னும் நாலடிச் செ-யுளில் அங்கணம் என்னுஞ் சொல் சா-கடை (சலதாரை) யென்றே பொருள்படுதல் காண்க.
வளமனைகளிலும் மாளிகைகளிலும் உள்முற்றம் கற்பாவியும் சாந்து பூசியும் துப்புரவாயிருக்குமாதலால், அதிற் கொட்டிய பாலை நாயும் இரப்போனும் நக்கியும் உறிஞ்சியுங் குடிக்க முடியும். ஆயின், சா-கடையில் ஊற்றிய பால் ஒருவனுக்கும் ஒன்றிற்கும் உதவாது.
உள்முற்றத்தின் கோடியிலேயே சா-கடை தொடங்குமாதலால் வடவர் அங்கணம் என்னுஞ் சொற்கு முற்றம் என்னும் வழிப்பொருள் கொண்டனர்.
இனி, அமிழ்தம் என்பது இக் குறளில் இவ் வுலகத்திலுள்ள பாலைக் குறிக்குமேயன்றித் தேவருலகத்திலுள்ளதாகக் கருதப்படும் எவ்வுணவையுங் குறிக்காது. பாலும் சாவா மருந்தே. இவ் விரு குறளாலும் தாழ்ந்தோரவைக் கண் உயர்ந்த பொருள்களைச் சொல்லற்க என்பது கூறப்பட்டது.
அதி.73 - அவையஞ்சாமை
அதாவது, அவையின் திறத்தையறிந்து அதற்கேற்ப ஒன்றைச் சொல்லுங்கால், அதற்கு (அவ் வவைக்கு) அஞ்சாமை. அஞ்சினாற் சொற் பொழிவாற்றல் இயலாதாதலின், அதை விலக்குவதற்கு இது அவை யறிதலின் பின் வைக்கப்பட்டது.
721. வகையறிந்து வல்லவை வா-சோரார் சொல்லின்
றொகையறிந்த தூ-மை யவர்.
(இ-ரை.) சொல்லின் தொகை அறிந்த தூ-மையவர் - சொல்லின் தொகுதியை யறிந்த தூய மொழிநடையார்; வகை அறிந்து வல் அவை வா-சோரார் - கற்றோர் கூடிய வல்லவை, அல்லவை என்னும் இருவகை அவைகளை அறிந்து, வல்லவைக்கண் ஒன்றைச் சொல்லுங்கால் அச்சத்தினால் மனந்தடுமாறியும் வா-தவறியும் வழுப்படச் சொல்லார்.