உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 3.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

54

திருக்குறள்

தமிழ் மரபுரை

 கல்வி முயற்சியை வீணாக்குவதால், கல்லாதவரினுங் கடைப்பட்டவ ரென்று உலகம் பழிக்கும் என்றார். 'நல்லார்' என்பது நன்மை செ-வார் என்பதைக் குறிப்பா- உணர்த்தி நின்றது.

730. உளரெனினு மில்லாரொ டொப்பர் களனஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார்.

(இ-ரை.) கற்ற களன் அஞ்சிச் செலச் சொல்லாதார் - தாம் கற்றவற்றை அவைக்கஞ்சி அதற்கேற்பச் சொல்லமாட்டாதார்; உளர் எனினும் இல்லா ரொடு ஒப்பர் - உடலோடு கூடியுள்ளாரெனினும் உயர்ந்தோர் கருத்தில் இறந்தாரோ டொப்பர்.

களம் என்பது அவையையும் அவையிருந்த இடத்தையுங் குறிக்கும். ஆதலால், "ஈண்டுக் களனென்றது ஆண்டிருந்தாரை" என்னும் பரிமேலழகர் கூற்று வேண்டுவதில்லை. இவ் வைங்குறளாலும் அவையஞ்சுவாரது இழிவு கூறப்பட்டது.

உறுப்பியலில் அமைச்சுப் பகுதி முற்றிற்று.

அதி.74-நாடு

அதாவது, அரசனும் அமைச்சருள்ளிட்ட குடிகளும் இருந்து வாழ்வதற்கு இன்றியமையாத ஆள்நிலத்தைப்பற்றிக் கூறுவது.

731. தள்ளா விளையுளுந் தக்காருந் தாழ்விலாச்
செல்வருஞ் சேர்வது நாடு.

(இ-ரை.) தள்ளா விளையுளும் - குறையாத விளைபொருளும்; தக்கா ரும் - தகுதியுள்ள பெரியோரும்; தாழ்வு இலாச் செல்வரும் - கேடில்லாத செல்வமுடையோரும்; சேர்வது நாடு - முன்கூறப்பட்ட செங்கோலரச னோடும் சிறந்த அமைச்சனோடும் பொருந்தியிருப்பதே நல்ல நாடாவது.

தள்ளா விளையுள் என்பது தாழ்ந்த வகையினதாகத் தள்ளப்படாத விளையுள் என்றுமாம். விளையுள் என்பது உழவரையும் ஒருமருங்கு குறிக்குமேனும், இயற்கையுஞ் செயற்கையுமாகிய இருவகை விளையுள் இருப்பதனாலும், சேர்வது' என்பது கூடி அல்லது பொருந்தியிருப்பது என்றே பொருள்படுதலாலும்,