உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை

157

தென்னிந்திய மொழியொன்றைக் கட்டாயப் பாட மாக்கின், வடஇந்திய மக்கட்கு வெறுப்பும் சினமும் ஏற்பட்டுத் தேர்தலில் தோல்வியடைய ய நேருமோவென்று ஆளுங்கட்சி களும் அஞ்சுவதால், மூன்றாம் மொழிக்கல்வியை நடுவணரசும் வடநாடுகளிற் கட்டாயப் பாடமாகப் புகுத்துவதில்லை. ஓரிரு பல்கலைக்கழகங்களில் மட்டும் கடமைக்காக ஒரு தென்னிந்திய மொழியை விருப்பப் பாடமாகப் புகுத்தி, மாணவர் சேர்வதும் கற்பதும் பற்றிக் கடுகளவும் கவலையின்றியிருப்பது, மும் மொழித் திட்ட நிறைவேற்றமாகி விடாது.

6

மும்மொழித் திட்டம் இந்தியப் பொதுவாயின், தாய் மொழியும் ஆங்கிலமும் அல்லாத மூன்றாம் மொழி இந்திய ரனைவர்க்கும் ஒன்றாயேயிருத்தல் வேண்டும். தென்னாட் டார்க்கெல்லாம் இந்தியும் வடநாட்டார்க்கெல்லாம் ஏதேனுமொரு தென்னாட்டு மொழியும் மூன்றாம் மொழி யென்பது, பகுத்தறிவிற் கொத்ததும் நேர்மையானது மன்று.

தென்னாட்டு மொழிகளும் ஒருதிறப்பட்டவையல்ல. சிறியவும் பெரியவும், எளியவும் வலியவும், ஆரியச்சார்பு அற்றதும் குன்றியவும் மிக்கதும் ஆகப் பல்வேறு திறப்பட்டன. ஆதலால், அவற்றுளொன்றைக் கற்பினும் நடுநிலைக்குப் பொருந்தாது; இருதிசையர் முயற்சியும் சமநிலைப்பட்டு விடாது.

இனி, வடநாட்டு மாணவர் அக்கம்பக்கத்து இனமொழி களுள் ஒன்றை மூன்றாம் மொழியாகக் கற்கலாம் என்றும், அவர்க்கு விருப்பமான ஒரு திட்டத்தைச் சில வடநாட்டுத் தலைவர் விளம்புகின்றனர். இது, தென்னாட்டு மொழித் திட்டத்திலும் மிகக் கேடானதாகும்.

இதெல்லாம்

தென்னாட்டார்

தெம்மாடிகளென்று இந்திவெறியர் கருதிக்கொண்டு, இந்தியைப் புகுத்தச் செய்யும் சூழ்ச்சியே யன்றி வேறன்று. எந்நாட்டார் எவ்வகைத் திட்டத்தை எங்கெங்குப் புகுத்தினுஞ் சரி; ஆரியச்சார்பான திரவிடரெல் லாம் இந்திவெறியர் இந்தியைத் திணிக்குமளவு திறந்தவாய ராயிருப்பினுஞ் சரி; உலக முதற்றாய் உயர்தனிச் செம்மொழி வழங்குவதும், திருவள்ளுவர் திகழ்ந்ததும், அறிஞர் அண்ணாதுரையார் தோற்றுவித்த தி.மு.க.வே உலகுள்ள அளவும் ஆளத்தக்கதுமான தமிழ்நாட்டில் மட்டும், இருமொழி திட்டமே என்றும் நிலைத்திருத்தல் வேண்டும்.