உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




158

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை 8. இருமொழித் திட்டம்

இந்தியரெல்லாரும் நிலத்தாலும், நாகரிகத்தாலும் பண் பாட்டாலும், விடுதலையாலும், ஆட்சியாலும் ஓரினத்தார்; ஒரு பெருங்குடும்ப உடன்பிறந்தார். ஆதலால், உயர்ந்தோர் தாழ்ந் தோர் என்றும், வடநாட்டார் தென்னாட்டார் என்றும், ஆள்வார் ஆளப்படுவார் என்றும், இந்தியார் ஏனையார் என்றும், தமிழர் ஆரியர் என்றும் வேறுபாடின்றி, சமநிலை யுணர்வொடு தாய்மொழியும் ஆங்கிலமுமாகிய இருமொழித் திட்டமே இந்தியா முழுதுங் கைக்கொள்ள வேண்டும்.

இத் திட்டத்தால் இந்தியா வெங்கும் அமைதியும் ஒற்று மையும் உரமும் முன்னேற்றமும் உண்டாகும். இந்திக்கு வீணாகவும் நடுநிலை திறம்பியும் செலவழிக்கும் கோடிக் கணக்கான பொதுப்பணம் எஞ்சிப் பிற நற்பணிகட்குப் பயன்படும். அதனால், ஏனை மொழியார்க்கு ஏற்பட்டுள்ள முறையான எரிச்சலும் புழுக்கமும் பொறாமையும் நீங்கும்.

தமிழ மாணவர் சச்சரவுங் கிளர்ச்சியும் கலக்கமுமின்றி, முழுக் கவனத்தையும் பாடத்திற் செலுத்துவர்.

தமிழ்நாட்டு அரசு எல்லாத் துறைகளிலும் நடுவணர சுடன் முற்றும் ஒத்துழைக்கும்.

9. ஆங்கிலத்தின் இன்றியமையாமை

இக்காலக் கல்வியெல்லாம் பெரும்பாலும் அறிவியலும் கம்மியமுமா யிருப்பதனாலும், அதைத் தமிழ்வாயிலாக வன்றி ஆங்கில வாயிலாகவே பெறவியலு மாதலாலும், ஆங்கிலம் அறிவியன் மொழியாயிருப்பதொடு உலக

மொழியாயுமிருப்பத னாலும், ஒருவர் இக்காலத்திற்கேற்ற அறிவு பெறவும், ஏதேனு மொருவகையிற் பிழைக்கும் வழிதேடவும், ஏந்தாகவும் மதிப்பாகவும் வாழவும், உலகஞ் சுற்றவும், ஆங்கிலக் கல்வி இன்றியமையாததாகும்.

கல்லூரிகளில் மட்டுமன்றிப் பள்ளிகளிற் பணியாற்றும் தமிழாசிரியர்க்கும் ஓரளவு ஆங்கிலக் கல்வித் தகுதி வேண்டி யிருப்பதனால், ஆங்கிலத்தின் இன்றியமையாமையை மேற் கொண்டு விளக்க வேண்டுவதில்லை.

தமிழ்நாடு இந்தியை யெதிர்த்து இருமொழித் திட்டத் தையே மேற்கொள்வதால், அதற்கும் ஆங்கிலத்துணை