உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ்நாட்டு அரசின் தனிக்கடமை

159

இன்றியமையாததாகும். ஆங்கிலம் நீங்கிவிட்டால், இந்தி உடனே அந்த இடத்தை இனணப்புமொழி அல்லது பொது மொழியென்னும் பெயராற் பற்றிக்கொள்ளும். அதற்காகவே அடிமுதல் முடிவரை எல்லாக் கல்வியையும் நாட்டு மொழிகளில் நடத்துமாறு, இந்திவெறியர் மிகுந்த நடுவணரசு க்கியும் வற்புறுத்தியும் வருகின்றது. தாய்மொழிப் பற்று

வெறியளவு

விஞ்சிவிடின், ஆங்கிலப்பற்றுத் தானாக அகன்றுவிடு மென்பது அதன் கருத்து. இதன் மருமத்தை அறியமாட்டாத சில தமிழாசிரியரும், தம்மைத் தலைசிறந்த தமிழ்ப் பற்றாளராகவும் தமிழ்க்காவலராகவும் காட்டல் வேண்டி, தமிழ் ஒன்றே எல்லா நிலையிலும் கல்விவாயிலாக இருத்தல் வேண்டுமென்று தம்பட்ட மடித்து வருகின்றனர்.

தமிழும் (தாய்மொழியும்) ஆங்கிலமும் ஒருங்கே கல்வி வாயிலாக இருப்பதனால், தமிழுக்கு ஒரு கேடுமில்லை. தமிழும் தழைத்தோங்கும். வெளிநாடு செல்பவர்க்கும் ஆங்கில வறிவாற் பிழைப்பவர்க்கும் ஆங்கிலம் பயன்படும்.

ஓர் அயன்மொழியைக் கற்பதற்குச் சிறந்தவழி பேச்சுப் பழக்கமே. ஆங்கிலம் கல்விவாயிலாக இருப்பின், பேசிப் பழக மிகுந்த வாய்ப்புண்டு. அதனால் ஆங்கிலத்தில் விரைந்தும் பிழை யின்றியும் பேசும் ஆற்றல் பெறலாம். ஆங்கிலர் காலத்துப் பட்டந் தாங்கியர்க்கும் க்காலத்துப்

பட்டந்தாங்கியர்க்கும்

ஆங்கிலப் பேச்சாற்றலிலும் தை வெள்ளிடை

எழுத்தாற்றலிலும் உள்ள வேற்றுமை,

பட்டந்

மலைபோல் தெள்ளிதிற் காட்டும். அக்காலத்துச் சேர்முகக் கல்வியரு ம் (Matriculates) இக்காலத்துப் தாங்கியர்போல் அறிவாற்றல் பெற்றிருந் தனர்.

.

இனி, ஆங்கிலவாயிற் கல்வியால் தமிழ்ப்பற்றுக் குறையு மென்பது மடநம்பிக்கையே. ஆங்கிலத்திற் சிறந்த மெய்ப் பொருளியற் பேராசிரியரான பி. சுந்தரம்பிள்ளையே தமிழ னுக்குப் பள்ளியெழுச்சி பாடித் தமிழுணர்ச்சியூட்டியவர். மறைமலையடிகள், பூரணலிங்கம் பிள்ளை, உமாமகேசுவரம் பிள்ளை, பவானந்தம்பிள்ளை, சோமசுந்தர பாரதியார், கா. சுப்பிரமணியப் பிள்ளை முதலிய பல தமிழ்த்தொண்டர் ஆங்கிலவாயிற் கல்வி கற்றவரே. ஆங்கிலவாயிற் கல்வி கற்றவர்க் குத் தமிழ்ப் பற்றிரா தென்பது, பெற்றோரு டனன்றிப் பிறருடன் பேசுபவர்க்குப் பெற்றோர்மேற் பற்றிராதென்று சொல்வதொத் ததே.