உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




216

மண்ணில் விண் அல்லது வள்ளுவர் கூட்டுடைமை

இரும்புங் கண்டுபிடிக்குமுன், கல்லிற்குப்பின், மரத்தையே தட்டுமுட்டுகட்கு மக்கள் பயன்படுத்தியிருத்தல் வேண்டும். கொல்தொழில் என்பது கொலை வினை. உயிருள்ள பொரு ளையே கொல்லுதல் கூடும். மரம் உயிருள்ளது. ஆதலால் தச்சர் மரக்கொல்லர் எனப்பட்டனர். “மரங்கொஃ றச்சரும்' என்று சிலப்பதிகாரங் (5 : 29) கூறுதல் காண்க. கொல், கம்(கம்மியம்) என்பனபோல், தச்சு என்பது முதற்காலத்திற் கலையைக் (art) குறித்தது.

தச்சன் - Gk tekton (joiner, carpenter), Gk. tekhne(art) - Gk. tekhnikos-F. technic, E technic, technique, technical.

துள் - துர(துளை) - துற - துறப்பு - துறப்பணம்

-

-

=

துளையிடு கருவி (drill). துற திற. துறப்பு திறப்பு, துறவு - திறவு, துறப்பு = திறவுகோல். துறப்புக்குச்சு என்னும் வழக்கை நோக்குக.

Gk. trupao, to bore, trupa, hole - Gk. trupanon - L. trepanum - OF. trepan(er) - ME, E. trepan, borer, surgeon's cylindrical saw. துறப்பணம் - Gk. trupanon. இங்ஙனம் தச்சுவேலைக் கருவிப்பெயரும் ஒத்திருத்தல் காண்க.

தீர்தல் = முடிதல். தீர்த்தல் = முடித்தல். தீர்மானம் = முடிவு, முடிபு, இசையில் தாளமுடிவு அல்லது மதங்கம் (மிருதங்கம்) போன்ற தோற் கருவித்தட்டு முடிப்பு. 'மானம்' ஒரு தொழிற்பெயரீறு ஒ.நோ: சேர் சேர்மானம். தீர்மானம்

தீர்மானி. தீர்மானித்தல் = முடிவு செய்தல், தாளந் தீர்த்தல். L.terminus, end, limit, boundary.

L. terminus-OF. terme - ME, E. term, limit of time, limited period, period during which instruction is given in schools and colleges, estate or interest in land to be enjoyed for fixed period, word used to express a definite conception, language employed, mode of expression, conditions of agreement or reference.

E. terminate, to come or bring to an end.

L. determinare - F. determiner - E. determine, to bring or come to an end, limit in scope, define, fix beforehand, settle, decide. L. de - பொருளை நிறைவிக்கும் அல்லது மிகுதிப்படுத்தும் ஒரு முன்னொட்டு.

இத்தகைய சொற்கள் ஏராளமாக வுள்ளன. இங்ஙன மிருக்கவும், அறிவியற் குறியீடுகளை யெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கப் போதிய சொல்லில்லையென்றோ, ஒரு வகையாலும் மொழிபெயர்க்க முடியாதென்றோ, சொல்வது