உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 30.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முடிவுரை

217

அறியாமையின் பாற்பட்டதே. தம்மைப் போற் பிறரையுங் கருதித் தமக்குத் தெரியாத தெல்லாம் பிறருக்குந் தெரியா தென்று கொள்வது, பலரின் பிறவிக்குணமாயுள்ளது.

இனி, பல மேலையாரியக் குறியீடுகளும் சிறப்புச் சொற் களும், பொருளளவில் மிக வுயர்ந்தவையேனும், சொல்லளவில் மிக எளியவையாய் இருப்பதும் கவனிக்கத்தக்கதாகும். அவற்றுட் சில வருமாறு:

1. ஆட்பெயர்

E.

ampere, farad, ohm, volt, watt என்பவை மின்னாற்றலின் அளவுகளையும் இயல்புகளையும் கண்டுபிடித்த அறிஞரின்

பெயர்களே.

E. macadam என்பது Mc Adam என்பவர் அமைத்த சாலையமைப்பின் பெயர்.

E. boycott - 1880-ல் அயர்லாந்தில் நிலமுகவரா (land-agent) யிருந்து குடிவாணராற் புறக்கணிக்கப்பட்ட Cap Boycott என்பவர் பெயர்.

E

derrick

-

a kind of crane, ஒருவகைப் பொறை தூக்கி (பாரஞ்சாம்பி). தூக்குத்தண்டனை நிறைவேற்றியா (hangman)யிருந்த ஒரு வரின் பெயர் Derrick.

2. இடப்பெயர்

E

E.

E

chemistry - பண்டைக்காலத்தில் இதளியத்திற்கு (இரச வாதத்திற்கு)ப் பெயர்போன எகிப்தின் (Egypt) கிரேக்கப் பெயர் வடிவம் khemia என்பது. அது இடவாகு பெயராய் அக் கலைக்கே பெயராயிற்று. இதளியமே வேதிநூலுக்கு (Chemistry) மூலமாகக் கருதப்பட்டது. அரபியில் 'அல்' (al) என்பது ‘the' என்பது போன்ற குறிப்புச் சுட்டசைச்சொல் (defi- nite article).

Ar. alkimia - L. alchimia-E. alchemy. Gk. khemia-chemist - chemistry. magnesium, magnet - Magnesia என்ற இடத்திற் கண்டுபிடிக்கப் பட்ட காந்தக்கல் magnesia lithos எனப்பட்டது.

magnesia - magnesium, magnet, lithos, stone.

Academy - Gk. akademeia என்பது பிளேற்றோ (Plato) இருந்து தம் மாணவர்க்குக் கற்பித்த தோட்டத்தின் பெயர்.

Jurassic, Permian, Devonian, Cambrian என்னும் நிலநூற் குறியீடுகளும் இடம்பற்றியனவே.