உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 31.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழிநூல்

(3) வேதமொழியும் சமற்கிருதமும் ஒன்றென்பது.

(4) சமற்கிருதம் பண்டை உலகவழக்கு மொழி என்பது.

95

வேத மொழியே வழக்கற்றும் பிராகிருதங் கலந்தும் போ-விட்டது. அதன்பின் வேதமொழியோடு தமிழைக் கலந்து ஆக்கிய சமற்கிருதம். இலக்கிய நடைமொழியே யன்றி உலக வழக்குமொழியன்று. அதன் நிலைமை படிமையும் பாவையும் போன்றதென அறிக. அது பிறந்ததுமில்லை; இறந்தது மில்லை.

(5) சமற்கிருதம் ஆரியமூலம் என்பது

சமற்கிருதம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய இலக்கியச் செம்மொழி களைச் சிறப்பாகச் சமற்கிருதத்தை, ஆரிய மொழிகட்கு மூலமாகக் கொண்டே, கிரிம் நெறியீடு என்னும் ஆரிய இனமொழி மெ-ம்மாற்ற வா-பாடு வகுக் கப்பட்டுள்ளது. இது கடைமகனைத் தலைகனாக வைத்து உடன்பிறந்தார் வரிசையைத் தலைகீழாக அமைப்பது போன்றது.

(எ-டு)ஆரிய மூச்சொலி முழங்கு நிறுத்தங்கள் முழங்கு நிறுத்தங்கள ாகத் திரிந்தன என்பது.

சமற்கிருதம் கிரேக்கம் இலத்தீன் கோதியம் செருமானியம் ஆங்கிலம்

bhar

bhu

dvara

(= dhvara)

phero fero baira

biru bear

phuo fu-i

bi-n

be

thura fores daur tor

door

இங்குக் காட்டப்பட்டுள்ள முச்சொற்கட்கும் மூலம், முறையே பொறு, பூ, துள்-துளை என்னும் தமிழ்ச்சொற்களாகும். பொறுத்தல்= சுமத்தல். “சிவிகை பொறுத்தானோ டூர்ந்தானிடை” (குறள். 37) பூத்தல்=தோன்றுதல், இருத்தல். “பூத்தலிற் பூவாமை நன்று”. (நீதிநெறி, 6). துளை = வாசல்.

barn

மாக்கசு முல்லர் bear, burden, bier, barrow, birth, bairn, barley, என்று ஆங்கிலத்திலும்; ber என்று செலத்தியத்திலும் சிலா வோனியத்திலும்; bar என்று செந்திலும்; உள்ள சொற்களெல்லாம் bar என்னும் வேரினின்று பிறந்த பொறுத்தற் கருத்துச் சொற்களென்று, மொழிநூல் பற்றிய முச் சொற்பொழிவுகள் (Three Lectures on the Science of Lan- guage) என்னும் நூலிற் கூறியுள்ளார். (பக். 20-34).