உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




82

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

திரித்தும் ஆறுமுகம் என்பதை ஷண்முக என்று ஒரு பகுதி மொழிபெயர்த்தும், இருகை முருகனைப் பன்னிரு கையனாக்கியும், காளைப்பருவத்தானைப் பையற் பருவத்தானாகக் காட்டியும், தெய்வயானை என்னும் வேறொரு தேவியையுஞ் சேர்த்தும், பிறவாறும் உண்மைகளை மாற்றித் தமிழர் முற்றும் நம்புமாறு செய்துவிட்டனர்

ம்

ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சி முறையும் தமிழகத்திற் புகுத்தப் பெற்று இருநூற்றாண்டாகியும் இன்னும் பட்டக்கல்வி கற்ற தமிழர்க்குங் கண்திறவாமையால், 1964ஆம் ஆண்டு செபுத்தெம்பர் மாதம் 22 ஆம் பக்கல் சென்னையரசு பொருட்காட்சிச்சாலை மண்டபத்தில் தென்னிந்தியப் பழம்பொருட் கலைக்கழகச் சார்பிற் பேரா. கே.ஏ. நீலகண்ட சாத்திரியார் படித்த கட்டுரையில், செந்து (Zend) மொழியில் முருக் (Muruk) என்றும் பழம்பாரசீகத்தில் முர்க் (murgh) என்றும் சேவலைக் குறிக்குஞ் சொல்லிருத்தலால், அச் 6 சொல்லினின்றே சேவற்கொடியோனாகிய தெய்வத்தைக் குறிக்கும் முருகன் என்னும் தமிழ்ப் பெயரும் திரிந்துள்ளதென்று கூறியுள்ளார்.

இதை மறுத்துத் தமிழறிஞர் சிலர் ‘குறள் நெறியிற் கட்டுரை வரைந்தாரேனும், நாடு முழுதுங் கிளர்ச்சி யெழவில்லை. முப்பெருஞ் சிவமடங்களும் மூகங்களா யிருந்துவிட்டன. சட்டப் புலமைபெற்ற தமிழ வழக்கறிஞரும் சற்றும் வாய்திறந்திலர். இந்நிலையில், தமிழண்ணல் இராம. பெரிய கருப்பன், எம்.ஏ., ‘குறள்நெறி' யிதழ் நான்கில் வரைந்த தொடர்கட்டுரை மிகப் பாராட்டத்தக்கதும் தமிழன் தன்மானத்தைப் பெரிதுங் காப்பதுமாகும்.

ஆரிய மதமெல்லாம் பல்வேறு சிறுதெய்வ வேள்வி வழிபாடே யென்பதையும், வேதத் தெய்வங்களுள் முருகன், சிவன், காளி, திருமால் என்னும் நால்வரும் இல்லை யென்பதையும், நன்றாயறிதல் வேண்டும்.

இனி, இந்தியில் சேவற்கோழிப் பெயர் முர்கா என்றும் பெட்டைக்கோழிப் பெயர் முர்கீ என்றும் இருத்தலால், இந்தி இந்தியப் பொதுமொழியாயின், பேரா. கே.ஏ. நீலகண்ட சாத்திரியார் தோற்றுவாய் செய்துவைத்த ஆராய்ச்சிக் கட்டுரை, ஓர் ஆராய்ச்சி நூலாக விரிந்து, ஒரு வையாபுரியார் அல்லது ஆரியர் பண்டாரகர் பட்டம் பெற உதவும் என்பது திண்ணம். அதன்பின் அம் முடிவை மாற்றுவது அரிது. முருகன் என்னும் பெயரும் முர்க என்னும் வடிவடையும்.

முருகன் தமிழ்த் தெய்வமே என்பது என் தமிழர் மதம் என்னும் நூலில் ஐயந்திரிபற விளக்கப் பெறும்.