உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

81

மறவராயிருந்ததினால், தங்கள் தெய்வத்தையும் தலைசிறந்த மறவனாகக் கொண்டு அதற்குத் தக்க இளைஞன் என்னும் கருத்தில் முருகன் அல்லது குமரன் எனப் பெயரிட் டழைத்தனர்; மலை களிலுள்ள மரங்கள் உராய்ந்து தோன்றும் செந்நெருப்பை அவன் தோற்றமாகக் கருதி அவனைச் சேயோன் (சேந்தன்) என்றனர்; தம் படைக்கலமாகிய வேலையே அவனுக்கும் படைக்கலமாக்கி அவனை வேலன் என்றனர்; மலங்காட்டுக் கடப்பமலர் மாலையை அவனுக்கு அணியாக்கிக் கடம்பன் என்றனர்; குறிஞ்சிக்கேயுரிய அழகிய பறவையாகிய மயிலை அவனுக்கு ஊர்தியாக்கினர்; அந் நிலத்திற்கே யுரிய மறமிக்க போர்ச்சேவலின் வடிவை அவன் கொடியுருவமாக்கினர்; தாம் உண்ணும் தினைமாக் கொழுக் கட்டையையும் கொழுத்த வெள்ளாட்டுக் கடாக்கறியையும் தாம் பருகும் தேனையும் கள்ளையும் அவனுக்கு உணவாகப் படைத்தனர்; குறிஞ்சிநிலத் தலைவிக்கு அல்லது பெண்மணிக்கு இடும் வள்ளி (கொடி, கொடிச்சி) என்னும் பெயரை அவன் தேவி பெயராக்கினர். அம்பலக் கற்றூணில் உருவம் பொறிக்கப்பட்டமையால் அல்லது உறைவதாகக் கருதப்பட்டமையால், முருகன் கந்தன் எனப்பட்டான். கந்து தூண். கந்து - கந்தன்.

=

ஆறுமுகம் என்பது பிற்காலத்தில் முருகன் என்னும் ஒரு பாண்டியனின் ஆறுபடை வீடுகள் பற்றியெழுந்த பெயராகத் தோன்றுகின்றது. முகம் = இடம். யானையூர்தியும் அவ் வேந்தனதே.

இவை யாவும் ஆரியர் வருமுன் தமிழகத்தில் நிகழ்ந்த செய்தி களாகும். ஆயிரக்கணக்கான முதலிரு கழக நூல்களும் ஆரிய ஏமாற்றை வெளிப்படுத்தும் சான்றாகாவாறு ஆரியரால் அழிக்கப் பட்டு விட்டமையால். அவற்றிலிருந்து மேற்கோள் காட்ட முடியவில்லை.

ஆரியர் இந்தியாவிற்கு வந்த காலமே கி.மு. 2000-1500தான். இறைவன் பெயரால் என்ன சொன்னாலும் நம்புமாறும் எதைக் கேட்டாலுந் தருமாறும் மதத்துறையில் மடம்பட்ட இந்தியப் பழங்குடி மக்களை யெல்லாம் ஏமாற்றால் அடக்கியொடுக்கி, தாமே என்றுந் தலைமையா யிருந்து இன்பமாய் வாழ எண்ணிய தன்னல ஆரியப் பூசாரியர், தமிழ் நாகரிகம் தலைசிறந்துள்ள தென்னாட் டொடு (கி.மு.1200போல்) தொடர்பு கொண்டபின்; தமிழத் தெய்வங்களையும் மதங்களையும் ஆரியப்படுத்தும் முயற்சியில், முருகனைப் பனிமலையடிவாரச் சரவணப் பொய்கையிற் பிறந் தானென்று பகுத்தறிவிற்கொவ்வாத அநாகரிகக் கதையொன்று கட்டி, அவனுக்குச் சரவணபவ (நாணற்காட்டிற் பிறந்தான்) என்றும் சுப்பிரமண்ய(ன்) (பிராமணர்க்கு நல்லவன்)என்றும் பெயரிட்டு; குமரன், கந்தன் என்னும் பெயர்களைக் குமார, ஸ்கந்த என்று