உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பின்னிணைப்பு

2. இந்திய வொற்றுமையைக் குலைப்பவர் யார்?

83

"நமக்குச் சென்னையில் அடிமையர் உளர்” (We have comrades in Bombay, administrators in Delhi, enemies in Bengal and slaves in Madras) 676 இந் நூற்றாண்டுத் தொடக்கத்தில் ஆங்கிலப் படைத் தலைவரா யிருந்த கிச்சினர் பெருமகன் கூறியதற்கேற்ப, தமிழ்நாட்டுப் பேராயத் தலைவரும் திரவிடநாடுகளின் பேராயத் தலைவரும் தம் அடிமைத் தனத்தினாலும் பதவிப் பேற்றுத் தன்னலத்தினாலும் இந்தியாரை ஆங்கிலர்போல் ஆளுங்குலமாகக் கருதிக்கொண்டு அவரொடு கருத்தொத்து, தமிழரையும் திரவிடரையும் அவர்க் கடிமைப்படுத்து மாறு, இந்தி கற்காவிடின் இந்திய வொற்றுமை குலைந்து போம் என்றும், அரும்பாடுபட்டடைந்த விடுதலையை இழந்துவிடுவோம் என்றும், பாட்டிமார் குழந்தைகட்குப் பூச்சாண்டி காட்டுவதுபோற் கூறிவருகின்றனர். இந்திக்கும் இந்திய வொற்றுமைக்கும் எள்ளளவும் தொடர்பில்லை.

விடுதலை யடைந்தது ஆங்கில வாயிலாகவே யன்றி இந்தி வாயிலாக வன்று. இனி, னி, இந்தி கற்காவிடின் தமிழ்நாட்டு மாணவர்க்கு வேலைவாய்ப்புக் குன்றுமென்பதும்,இந்தியைப் புகுத்தாவிடின் தமிழ்நாட்டுப் பேராயத் தலைவர்க்குப் பதவி வாய்ப்புக் குன்றும் என்பதுபற்றியே.

ஆங்கிலம் அறிவியன் மொழியாகவும் உலகப் பொதுமொழி யாகவும், இருநூற்றாண்டுகளாக இந்தியப் பொதுமொழியாகவும்

ஆட்சிமொழியாகவும் உயர்கல்வி மொழியாகவும் இருந்து வருவதால், அதனை அங்ஙனந் தொடரவிடுவதே, பல்வேறு இந்திய நாடுகட்குள் பொறாமைக்கும் பிளவிற்கும் எள்ளளவும் இடமின்றி, நடுநிலைமையைப் பேணியும் திறமையை வளர்த்தும், நிலையான ஒற்றுமைக்கும் அரணான வாழ்விற்கும் பல்துறை முன்னேற்றத் திற்கும் உண்மையாக வழிகோலுவதாகும்.

இற்றை யாங்கிலமொழி நூற்றிற்கெண்பது கிரேக்க இலத்தீன மாகவும், நூற்றிற்குப் பத்து அவையல்லாத பிறமொழிகளாகவும், எஞ்சிய பத்தே ஆங்கில சாகசனியமாகவும் இருப்பதால், அது உலகப் பொதுவானதேயன்றி ஆங்கிலர்க்கே சொந்தமானதன்று. இற்றை யிந்தியருள் ஒரு வகுப்பாரான ஆங்கில-இந்தியரின் தாய்மொழி ஆங்கிலமாகவே யிருப்பதால், அது இந்தியாவிற்கு அயன்மொழியு மன்று இற்றை யிந்திய நடுவணாட்சி பேராயக்கட்சியினதாதலாலும். அக் கட்சித் தலைவருட் பெரும்பாலார் இந்தியாரும் இந்திச்சார் பினருமாதலாலும், அக் கட்சியாட்சித் தொடர்ச்சிக்கு இந்திவெறியர் துணை இன்றியமையாதலாலும், நடுவணரசினர் தந்நலமுங் கட்சி நலமுமே கருதி இந்திய முன்னேற்றத்தைப் புறக்கணித்து, இந்தியப்