உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?

93

பலகணி, சாளரம், காலதர், காற்றுவாரி என்னும் நாற்பழந் தமிழ்ச் சொற்கள் இருப்பவும் அவை வழக்கொழிந்து அவற்றிற்குப் பகரமாக ஜன்னல்' என்னும் போர்த்துக்கீசியச் சொல்லே வழங்கி வருகின்றது.

அடுக்களை, அட்டில், ஆக்குப்புரை (கொட்டகை), சமையலறை, மடைப்பள்ளி (அரண்மனை, கோயில் மடங்களி லுள்ளது) முதலிய பல முதுதமிழ்ச் சொற்கள் இருப்பினும், அவற்றுள் முதலிரண்டும் வழக்கு வீழ்ந்து ஏனையவும் வீழுமாறு, 'குசினி' என்னும் ஆங்கிலச் சொல்லும் வழங்கி வருகின்றது.

வடமொழி தேவமொழி யென்றும் தமிழ் தாழ்ந்த மொழி யென்றும் தவறாகக் கருதி, வேண்டாதும் வரைதுறையின்றியும் வழங்கிய வடசொற்களால் வழக்கு வீழ்த்தப்பட்ட தென்சொற்கள் எண்ணிறந்தன.

எ-டு:

தென்சொல் அந்தளகம்

அரசுகட்டில், அரியணை

அலுவல்

வடசொல்

கவசம்

சிங்காசனம்

அளியன்

அறிவன் (கிழமை)

ஆசிரியன்

ஆண்டை

ஆமணத்தி

இசை, இன்னிசை

உத்தியோகம்

மைத்துனன் (மச்சினன் மச்சான், மச்சாண்டன் மச்சாள்வி)

புதன்

உபாத்தியாயன்

எஜமான்

கோரோசனை

சங்கீதம்

இதள்

இயம்

இரப்பு,ஐயம்

இருதலை

உயிர்மெய்

உரையாடு

ஊதியம்

எடுத்துக்காட்டு

ஏதம்

ஐயம், ஐயுறவு

ஓர்புடையான். ஓரகத்தான்

கதிரவன்

பாதரசம்

வாத்தியம்

பிச்சை

பரஸ்பரம்

பிராணி

சம்பாஷி

லாபம்

உதாரணம்

அபாயம்

சந்தேகம்

சகலன், சட்டகன் சூரியன்