உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




98

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

தமிழ்நாட்டில் வடமொழிக்குப் பெருமதிப்பேற்பட்ட பின், ருபொருட் பல சொற்கள் ஒவ்வொன்றாய்த் தமிழிற் புகத் தொடங்கின.

எ-டு : சத்தியம், நிஜம், வாஸ்தவம்

சந்தோஷம், ஆனந்தம், குதூகலம், விவசாயம், கிருஷி

சங்கம், பரிஷத், சமாஜம், சதஸ்

ஜலம், தீர்த்தம்

தமிழ் அதன் பெருமையை இழந்ததினால் அதன் ஒருபொருட் சொற்கள் பல நாளடைவில் ஒவ்வொன்றாய் வழக்கு வீழ்த்தப் பட்டன.

எ-டு : உச்சிவேளை, நண்பகல், உருமம் ஊடல், புலவு, துனி

எச்சம்.,கான்முளை, கால்வழி, கொடிவழி, மரபு பூப்படைதல், முதுக்குறைதல்

மகிழ்ச்சி, களிப்பு, உவகை

முகில், எழிலி, மஞ்சு, குயின், களம், கார், மால் மெய்ப்பித்தல், மூதலித்தல்

பூப்படைதல் என்பது என்பது இன்று புஷ்பவதியாதல்

வடசொல் மொழிபெயர்ப்பாக விளங்குகின்றது

உள்.

என்று

வடசொல் வழக்கினால் தன் பொருளிழந்த தென்சொற்களும்

எ-டு : உயிர்மெய் - பிராணி

உயிரையுடைய மெய் உயிர்மெய். உயிர்மெய் போன்ற எழுத்தும் உயிர்மெய்யெனப் பெற்றது ஆகுபெயர். இன்று அதன் பொருள் மறைந்தமையால் உயிரும் மெய்யும் சேர்ந்த எழுத்து உயிர்மெய்யெழுத்து எனத் தவறாக உரைக்கப்படுகின்றது.

சில ஒருபொருட் தென்சொற்கள் பொருள் தெளிவின்றி மயங்கிக்கிடக்கின்றன.

எடுத்துக்காட்டு :

நெடுமொழி

ஒருவன் தன் பகைவர்முன் தன் வலிமையை

எடுத்துக்கூறும் மறவுரை (சம்பிரதம்).

மேற்கோள் - ஒருவன் ஓர் அறத்தைக் கடைப்பிடிப்பதாகச் செய்துகொள்ளும் உறுதி(பிரதிக்ஞை).