உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?

சூள்

-

99

ஒருவன் ஒருவர்க்கு ஒரு நன்மையைத் தப்பாது செய்வதாகத் தெய்வத்தின் மேல் இடும் ஆணை.

ஒட்டு - ஒருவன் ஒரு சொற்போரில் வெற்றி, தோல்விபற்றித் தன் எதிரியின் அக்குத்துகட்கு (நிபந்தனைகட்கு ) உடன்பட்ட நிலை. வஞ்சினம் - ஒருவன் ஒரு போரில் தன் பகைவனுக்குத் தான் குறித்ததொன்றைச் செய்யாவிடின், ஒரு நிலைமைஅடைவதாகக் கூறும் சினமொழி (சபதம்).

பூட்கை - வெற்றி அல்லது இறப்புவரை ஊன்றிப் பொரு வதற்கு அடையாளமாக, ஒரு மறவன் ஒன்றை அணிந்து கொள்ளுதல். நேர்ச்சை ஓர் அடியான். ஒன்றைப் படைப்பதாக அல்லது, ஒன்றைச் செய்வதாக தெய்வத்தை நோக்கிச் செய்யும் தீர்மானம்.

-

-

நோன்பு ஓர் அடியான், வழிபாட்டு முறையில் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில், பசி, தாகம் முதலியவற்றால் நேரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் பொறை (விரதம்).

கடைப்பிடி

-

ஒரு கொள்கையை இறுதிவரை உறுதியாய்க் கொண்டு நடத்தல் (வைராக்கியம்).

சில தென்சொற்கள்., பெரும்பாலாரால் நீண்ட காலமாய்ப் புறக்கணிக்கப்பட்டுத் தாழ்த்தப்பட்டோர் வழக்கிலேயே முடங்கித் தாழ்த்தப்பட்டுப் போயின.

எ-டு : சோறு, மிளகுசாறு, தண்ணீர்

இவற்றுக்குப் பகரமாக, சாதம், ரசம், ஜலம் அல்லது தீர்த்தம் என்னும் சொற்களை ஆள்வது உயர்வென்று கருதும் அளவிற்கு, தமிழ் தாழ்த்தப்பட்டதோடு தமிழனும் தாழ்த்தப்பட்டுப் போயினன்.

இங்ஙனம் பன்னூற்றாண்டாகத் தொடர்ந்து வந்த இழிவால்., தமிழர் பேச்சில் பல சொற்றொடர்கள் ஈறு தவிர முற்றும் சமற்கிருதமாகவும் மாறிவிட்டன.

எ-டு : ஈஸ்வரன் கிருபையால் கிராமத்தில் சகலரும்

சௌக்கியம்.

இது, இறைவன் அருளால் சிற்றூரில் எல்லோரும் நலம் என்றிருத்தல் வேண்டும்.

வடசொல் வழக்கால் தமிழர்க்கு மொழியுணர்ச்சி முற்றும் அற்றுப் போயினமையின்,புதிது புதிதாய் வந்த உருதுச் சொற்களும்., ஆங்கிலச் சொற்களும் கங்கு கரையின்றித் தமிழிற் கலக்கத் தலைப் பட்டுவிட்டன.