உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




102

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

இனி, நேர் தென்சொல் இல்லாத அயற்சொற்களை அங்ஙனமே ஆளுதல் கூடாதோவெனின், அதுவும் கூடாததே. தமிழ் ஒரு பெருந் தாய்மொழியாதலின், அயன்மொழிச் சொற்களின் வேர்ப் பொருளறிந்து அதற்கொப்பப் புதுச் சொற்களை ஆக்கிக் கோடற்கு வேண்டும் .கருத்துச் சொற்களும் அதனிடத்து மிகுதியாய் உள. ஆதலால் அயற்சொற்கட்கு இயன்றவரை புதுச்சொற் புனைந்தே வழங்குதல் வேண்டும். இருட்டடிப்பு, கட்டுரை, கூட்டுறவியக்கம், செயலாளர், தண்டல்நாயகம், தொலைவரி, தொலைபேசி, தொலைக் காட்சி, படிவம், பொதுவுடைமை, முடிதிருத்து நிலையம், வழக்கறிஞர் முதலிய வேர்ப்பொருள்பற்றிய சொற்களும் சொற்பொழிவு, திரைப்படம், நகராண்மை, படம்பற்றி, பற்றாட்டு, பாராளுமன்று, மதிப்பெண் முதலிய பொருட்டன்மைபற்றிய சொற்களும் அண்மைக் பெற்றவையே.

காலத்தில் புதிதாகப் புனையப்

னி, புதுச்சொற் புனைந்தும் நேர் தென்சொல் அமைக்க வியலாத ஒருசில அயற்சொற்களை அங்ஙனமே ஆளலாம். ஆயின், அவற்றை அயன்மொழி யொலிப்படி வழங்காது தமிழொலிக் கேற்பத் திரித்தே வழங்குதல் வேண்டும். அல்லாக்கால் வேற்றொலி விரவித் தமிழ்த் தன்மை கெட்டுவிடும்.

சிலர் கார், பஸ், ரோடு முதலிய ஆங்கிலச்சொற்கள் தமிழிற் கலந்துவிட்டதனால் அவற்றை விலக்குதல் கூடாதென்பர். அவர் அறியார். அவை அன்றும் தமிழிற் கலக்கவில்லை. “உலகம் என்பது உயர்ந்தோர் மேற்றே" யாதலால், உயர்ந்த புலவர் வழக்கு நோக்கியே ஒரு மொழியின் இயல்பை அறிதல் வேண்டும். மொழி திருந்தாதார் வழங்கும் கார், பஸ் முதலிய சொற்களைத் தமிழ்ச்சொல்லாக ஏற்றுக்கொள்ளுவது கீழ்மக்களின் ஐம்பெருங் குற்றங்களை நல்லொழுக்கமாக ஒப்புக்கொள்வது போன்றதே.

மறைமலையடிகள் போலும் புலவரல்லாத பிறர் பேசும் மொழியை அளவையாகக் கொள்ளின் ஆங்கில உலக வழக்குச் சொற்கள் அத்தனையும் தமிழ்ச்சொல்லாகிவிடுமே “எனக்கு health (ஹெல்த்) சரியாய் இல்லாததினால் இன்றைக்கு morning (மார்னிங்), college ( காலேஜ் ) -க்குப் போய் first (ஃபஸ்ட் ) period (ப்பீரீடு) at- tend (அட்டண்) பண்ணிவிட்டு proffessor (புரொபசர்) இடம் half a day (ஆஃப் எ டே) leave(லீவ்) கேட்டுக்கொண்டு hostel