உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




தமிழ் கடன்கொண்டு தழைக்குமா?

-

103

(ஹாஸ்டல்)க்குப் போய் என் friend (ஃபிரண்டு) ன் room (ரூம்) -ல் rest (ரெஸ்ட்) எடுக்கலாமென்றிருக்கிறேன்” என்று பேசும் மாணவரைப் போன்று ஆங்கிலம் கற்றாரும் "ஏன் இவ்வளவு லேட்டு? டயம் என்ன தெரியுமா? டூட்டியைச் சரியாய்ச் செய். இல்லாவிட்டால் சூப்பிரண்டிடம் ரிப்போர்ட்டுப் பண்ணி விடுவேன்” என்று பேசும் கங்காணியைப் போன்று ஆ ங்கிலங் கல்லாதாரும், ஆங்கிலச் சொற்களை அளவிறந்து வழங்குவதை யார்தான் அறியாதார்? கற்றோரும் மற்றோரும் மதிப்பு வாய்ந்தோரையெல்லாம் ‘ஐயா என்று விளிக்காது ‘Sir’ (ஸார்) என்றே விளிப்பதால் ‘தமிழ் அகரமுதலியில் அவ் வாங்கிலச் சொல்லையே குறிக்கலாமோ? அங்ஙனம் குறிப்பின் பிற சொற்களையும் குறித்தல் வேண்டுமே. அன்று அது ஓர் ஆங்கில அகரமுதலியாகவன்றோ மாறிவிடும்! ஆதலால் தமிழ்ப்பற்றும் அறிவும் அற்ற ஒரு சாரார் வேண்டும் என்று கூறும் வெற்றுச் சொற்களைப் பொருட்படுத்தற்க. இதுகாறும் கூறியவற்றால், பிறரிடங் கடன் நப்பீல்டு,பிர்லா

காள்ள

வேண்டாத இராக்பெல்லர், நப்பீல்டு, பிர்லா முதலிய பெருஞ் செல்வர் போல், தமிழும் பிறமொழிகளினின்று சொல்லைக் கடன் கொள்ளா தென்றும்; அயற்சொற்களை எல்லாம் இயன்றவரை மொழிபெயர்த்தல் வேண்டும் என்றும்; மொழிபெயர்க்க முடியாத வற்றிற்குப் புதுச் சொற்களைப் புனைந்து கோடல் வேண்டு மென்றும்; அதுவும் இயலாத ஒருசில இன்றியமையாத சொற் களைத் தமிழ் எழுத்திற்கேற்பத் திரித்து வழங்குதல் வேண்டு மென்றும்; பிற மொழிகளிலுள்ள அரிய நூல்களை மொழி பெயர்ப்பதே தமிழை வளம்படுத்தத் தலைசிறந்த வழியென்றும்; பிற மொழிச் சொற்களைக் கட்டுமட்டின்றித் தமிழிற் கலப்பது அதன் கேட்டிற்கே வழிகோல்வதாகும் என்றும்; இதுவரை தமிழிற் புகுத்தப்பட்ட எல்லாச் சொற்களும் தமிழதிகாரிகளால் ஒப்புக் கொள்ளப்பட்டனவல்ல என்றும்; அவற்றை இயன்றவரை விலக்கித் தமிழின் தூய்மை தூய்மையைக் காப்பது தமிழறிஞரின் தலையாய

கட

னென்றும்; நேர்நின்று காக்கை வெளிதென்பாரும் தாய்க் கொலை சால்புடைத்தென்பாரும் தமிழை யொழிக்கத் தயங்கா ராதலின் அவர் தமிழுக்கு மாறாகக் கூறும் கூற்றையெல்லாம் கூற் றென்றெ கொள்ளுதல் வேண்டுமென்றும்; தெற்றெனத் தெரிந்து கொள்க.