உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




108

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

னகர மெய்யீற்றுப் பெயராக

மகர மெய்யீற்று இயற்பெயரை (proper name) உயர்வுப் பன்மையிற் குறித்தல் வேண்டின்,

மாற்றிக்கொள்ளலாம்.

எ-டு :

பயர்

உயர்வுப் பன்மை

பன்மை

செல்வர், செல்வன்மார்

செல்வம் - செல்வன் செல்வனார்

-

மேற்காட்டிய எடுத்துக்காட்டுகளினின்று பொதுவாக ‘அர்’ ஈறு பன்மையையும், ‘ஆர்’ ஈறு உயர்வுப் பன்மையையும் உணர்த் தும் என அறிந்துகொள்க.

குமரன் என்னும் தென்சொல் ‘கும்' என்னும் அடிப்பிறந்து, கூட்டத்திற்குத் தகுந்தவன் அல்லது திரண்டவன் என்னும் பொருளில் இளைஞனையே குறித்தது. இதன் பெண்பால் வடிவான குமரி என்னும் சொல்லும் இதே பொருளில் இளைஞையைக் குறித்தது.

கும்முதல் கூடுதல், திரளுதல். கும் - கும்மல் = குவியல்.

கும் - குமி - குவி - குவை, குவால், குவிவு, குவவு.

குமி - குமியல், - குவியல். கும்மிருட்டு - திணிந்த காரிருள். குவவுத்தோள் = திரண்ட தோள்.

கும்கும்பு கும்பல் -

கும்பு = FR1__1__1D. கூட்ட ம்.

= கூட்டம். கும்புதல் = கூடுதல்.

கும் - குமர், திரண்ட இளமை, இளமை, கன்னிமை, அழியாத்தன்மை. குமர் - குமரன், குமரி.

குறிஞ்சிநிலத் தெய்வமான முருகனும் பாலைநிலத் தெய்வமான காளியும், என்றும் இளமையர் என்னுங் கருத்துப் பற்றியே முறையே, குமரன் குமரி எனப்பட்டனர். காளியின் பெயராலேயே, மூழ்கிப் போன பழம்பாண்டி நாட்டுத் தென்கோடி மலையும் வடகோடியாறும் குமரியெனப் பெயர் பெற்றிருந்தன. குமரிமலையின் பெயராலேயே மூழ்கிப் போன தென்கண்டத்தைக் குமரிக்கண்டம் என்கின்றோம். குமரிமலையிருந்த காலம், ஆரியர் என்ற இனமே தோன்றாத தொன்முது பண்டைக் காலமாகும்.

வடமொழியாளர் தமிழின் தொன்மையை முற்றும் மறைத்துத் தமிழை வடமொழியின் வழியதாகக் காட்டல் வேண்டி, பின்வருமாறு குமரன் குமரியென்னும் இரு சொற்களின் வடிவையும் பொருளையும் திரிந்தும் மிகுத்தும் உள்ளனர்.