உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




110

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

ஸ்ரீ ல ஸ்ரீ என்னும் சிவமட வழக்கைத் திருத்தவத்திரு அல்லது பெருந்தவத்திரு என்று குறிக்கலாம்.

திருமதி என்னும் அடைச்சொல், திரு என்னும் தென் சொல்லையும் மதி என்னும் வடமொழியீற்றுத் திரிபையுங் கொண்ட இருபிறப்பி (hybrid) ஆதலால், அதை அறவே விலக்கல்வேண்டும். திருமகன் - திருமான் - ஸ்ரீமத் (வ.) - ஸ்ரீமb (பெண்பால்)

-

திருமதி ஸ்ரீமதி. திருவாட்டி என்னும் தூய தென்சொல்லை நீக்கிவிட்டுத் திருமதி என்னும் இருபிறப்பியை ஆள்வது,

"பேதைமை யென்ப தியாதெனின் ஏதங்கொண்

டூதியம் போக விடல்’

99

(குறள். 831)

என்னும் திருக்குறட்கே எடுத்துக்காட்டாம். ஒருகால், திருமதி என்பதன் ஈற்றை அறிவுப் புலனைக் குறிக்கும் தென்சொல்லாகக் கருதிக்கொண்டனர் போலும்! அறிவுத்திறனைக் குறித்கும் மதி என்னும் தென்சொல் வேறு; பெண்பாலுணர்த்தும் மதீ என்னும் வடமொழியீறு வேறு.

இனி, மதிப்படைச் சொற்கள். (1) முன்னடைச்சொற்கள், (2) பின்னடைச் சொற்கள் என ச் சொற்கள் என இரு வகைய.

கண்ணியம் வாய்ந்தவர்

பெயருக்குப்பின் ‘அவர்கள்' என்று குறிப்பது பின்னடைச் சொல்லாகும். அது உயர்வுப் பன்மை. அதற்கு ஒருமையும் பன்மையும் இல்லை.

எ-டு : திரு. மாணிக்கவேல் செட்டியார் அவர்கள்.

ஆற்றலும் தேர்வுப்பட்டம்

புலமையும் தொழிலும்

குறித்துவரும்

முன்னடையாக வரின் வேறடை தேவையில்லை.

எ-டு :

பண்டிதமணி கதிரேசச் செட்டியார்

புலவர் சின்னாண்டார்

பேராசிரியர் சொக்கப்பனார்

மருத்துவர் கண்ணப்பர்

நாவலர் வேங்கடசாமி நாட்டார்

சொற்கள்

புதுப்புனைவர் கோ. துரைச்சாமி நாயக்கர் (G. D. நாயுடு)

பண்டாரகர் (Dr.) சாலை இளந்திரையனார்