உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தி வரலாறு

1310-ல் அலாவுடின் அரசனின் படைத்தலைவனான மாலிக்கபூர் இராமேசுவரம்வரை படையெடுத்து வந்து, மதுரையிலும் திருச் சிராப்பள்ளியிலும் முகமதியச் சிற்றரையங்களை நிறுவிச் சென்றான். அவை அரை நூற்றாண்டு தொடர்ந்தன.

முகமது துகளாக்குக் காலத்தில் (1325-51) முகமதிய ஆட்சி தக்கணம் (Deccan) வரை பரவியது. 1347-ல் சபர்கான் தக்கணத்திற் பாமனி அரையத்தை நிறுவினான். அது 15ஆம் நூற்றாண்டிறுதியில் ஐஞ்சிற்றரையங்களாகப் பிரிந்து போயிற்று.

வலிமை மிக்க முகலாயப் பேரரசருள் ஒருவரான ஔரங்கசீபு காலத்தில் (1658-1707), முகமதிய ஆட்சி தமிழ்நாடுள்ளிட்ட கருநாடகம் என்னும் தென்னிந்தியாவிலும் பரவிவிட்ட து.

தில்லி முகமதிய அரசு தலைநகரானபின், முகமதியப் படை மறவர்தம் பாளையத்தில் (Encampment) இந்தி மக்களொடு பழகியதின் விளைவாக, இந்தியொடு பாரசீக அரபிச் சொற்கள் கலந்த உருது என்னும் கலவை மொழி தோன்றிற்று. உருது என்பது பாளையம் (camp) என்று பொருள்படும் பாரசீகச் சொல். உருது மொழிக்கு ரெக்தா (Rekhta) என்றும் பெயருண்டு. அது கலவைபற்றி ஏற்பட்ட பெயர் என்பர். இந்தியும் உருதுவும் பொதுமக்கள் வழக்கான கீழ்ப்படையில் ஒன்றேனும், புலமக்கள் அல்லது இலக்கிய வழக்கான மேற்படையில் வேறுபட்டனவாம். இந்தியின் உயர்நடையிற் சமற்கிருதச் சொற்களும், உருதுவின் உயர்நடையிற் பாரசீக அரபிச் சொற்களும், மிகுதியாகக் கலக்கும். அதோடு, இந்தி தேவநாகரி யெழுத்திலும் உருது பாரசீக அரபியெழுத்திலும் எழுதப்படும். இவ் வெழுத்து வேறுபாடு, செவிப்புலனாயிருக்கும் உலக வழக்கொற்றுமையையும் கட்புலனுக்கு முற்றும் மறைத்து விடும். ஆயினும், இலக்கணம் இரண்டிற்கும் ஏறத்தாழ ஒன்றே. உருது வடிவம் முதலில் தக்கணத்தில் தோன்றிய தென்றும், அதன் பின்பே தில்லி சென்றதென்றும், கூறுவர்.

உருது முகமதியரால் இந்துக்க ளிருப்பிடமாகிய இந்துத் தானத்திற் பேசப்படுவது என்னும் பொருளில் இந்துத்தானி (ஹிந்துஸ்தானி) எனவும்பட்டது. சமற்கிருதச் சொற்களும் பாரசீக அரபிச் சொற்களும் மிகுதியாய்க் கலவாமல் இந்திக்கும் உருதுவிற்கும் இடைப்பட்டது இந்துத்தானி என்பர் இந்துத்தானம் என்றது இந்தி பேசப்படும் வடஇந்தியாவை.

சிலர்.

உருது தக்கணத்திலும் கருநாடகத்திலும் நெடுநாள் வழங்கிய பின், சற்றுச் சிதைந்தும் திரவிட வழக்குக் கலந்தும் வடஇந்திய உருதுவினின்றும் திரிந்துள்ளது. இதனால், தென்னாட்டுருதுவைத் தக்கணி (Dakhani) என்பர்.

5