உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

(1)

வடநாட்டுப் பிராகிருதங்களை, பொதுவாக,

முதனிலைப் பிராகிருதம் (சூரசேனி, மாகதி முதலியன),

(2) வழிநிலைப் பிராகிருதம் அல்லது இலக்கியப் பிராகிருதம் (எ-டு.பாளி).

(3)

சிதைநிலைப் பிராகிருதம் (அபப்பிரஞ்சம் என்னும் கொச்சை வழக்கு),

(4) இற்றை மொழிகள் (இந்தி, வங்கம் முதலியன) என நால் நிலைப்படுத்துவர். சிலர் சிதைநிலைப் பிராகிருதத்தையும் இற்றை மொழிகளையும் சார்புநிலைப் பிராகிருதம் என ஒன்றாக்குவர்.

முகமதிய அரசர்க்கு முற்பட்ட வடநாட்டு இந்து அரசரும் பாவலரும் புலவரும் சமற்கிருதத்தையே வளர்த்து வந்ததால், பிராகிருத மொழிகள் பெரும்பாலும் பண்படுத்தப்பெறாது மேன்மேலும் சிதைந்துகொண்டே வந்தன. பாளிமொழி பண்படுத்தப்பட்டதற்குக் கரணியம் அது புத்தமத மொழியாகப் போற்றப்பட்டமையே.

உருதுமொழி இந்தியடிப்படையில் தோன்றியதாயினும், உருதுப் புலவர் அல்லது எழுத்தாளர் ஆளும் இனத்தைச் சேர்ந்தவரா யிருந்தமையால், அதைப் பதினான்காம் நூற்றாண்டிலிருந்து பண்படுத்திவந்ததாகவும்,சிறிதுசிறிதாக மேன்மேலும் பாரசீக அரபிச் சொற்களைச் சேர்த்து வந்ததாகவும், தெரிகின்றது. அதனால், ‘லல்லுஜி லால்' என்பவர் உருது மொழியிலுள்ள பாரசீக அரபிச் சொற்களை நீக்கிச் சமற்கிருதச் சொற்களைப் பெய்து இற்றை இந்தியிலக்கிய நடையை உருவாக்கி, அதில் தமது பிரேம்சாகர் என்னும் நூலை இயற்றினார் என்று சொல்லப்படுகின்றது. சிலர் அவர் ஒரு புதுமொழியைப் படைத்தாரென்று கூறுகின்றனர். வேறு சிலர் அக் கூற்றை மறுக்கின்றனர்

கிரையர்சன் இந்தியிலக்கிய வுரைநடைத் தோற்றத்தைப் பற்றிப் பின்வருமாறு வரைகின்றார்:

“உருது இலக்கியம் அதன் தொடக்க நூற்றாண்டுகளிற் செய்யுள் வடிவாகவே யிருந்தது. உரைநடை யுருது ஆங்கிலர் இந்தியாவிற்கு வந்தபின்பே வில்லியம் கோட்டைக் கல்லூரிப் பாடப் பொத்தகங்கட்காக உருவாக்கப்பெற்றது. அதே சமையத்தில் அக் கல்லூரியாசிரியரால் இந்துத்தானியின் இந்திவடிவம் புதிதாய் அமைக்கப்பெற்றது. அது இந்துக்கட்குப் பயன்படும் இந்துத் தானியா யிருக்கவேண்டுமென்று, உருதுவிலுள்ள பாரசீக அரபிச்