உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தி வரலாறு

சொற்களைக் களைந்து அவற்றினிடத்தில் நாட்டுமொழியாகிய சமற்கிருதத்தினின்று கடன்கொண்ட அல்லது திரித்த சொற்களைப் பெய்து ஆக்கப்பெற்றது. அதில் முதலில் வரைந்த பொத்தகம் மக்களால் விரும்பப் பெற்றமையாலும், பழுத்த இந்துக்கள் தம் மதவுணர்ச்சி புண்படாவாறு பொதுவாய் வழங்கத்தக்க மொழி யில்லை யென்னுங் குறையைத் தீர்த்ததினாலும், அது விரிவாகக் கையாளப் பெற்று உருதுவைக் கையாளாத வட இந்தியரின் உரைநடை மொழியாக இன்று ஒப்புக்கொள்ளப் பெற்றுள்ளது. - (Imperial Gazetteer of India, Vol.I.p. 366.)

(இந்தியப் பேரரையத் திணைக்களஞ்சியம், முதன்மடலம் ப: 366)

2. இந்திக் கிளைகளும் பிரிவுகளும்

ஓரொழுங்குபட்ட

இந்தி என்பது தனிமொழியன்று. பஞ்சாபிற்கும் சிந்துவிற்கும் கிழக்கும், வங்கத்திற்கும் ஒரிசாவிற்கும் மேற்கும், நேபாளத்திற்குத் தெற்கும், குசராத்திற்கும் மராட்டிரத் திற்கும் வடக்கும், பேசப்படும் பல உட்பிரிவுகளைக்கொண் பல்கிளை மொழியே இந்தி. இதன் பெருநிலப்பரப்பே அதன் பல்கிளைத் தன்மையை தெளிவாகக் காட்டும். நெல்லைத் தமிழும் மேலை வடார்க்காட்டுத் தமிழும்போல் வேறுபட்ட நடை வழக்குகளும் (patois) தமிழினின்று 12ஆம் நூற்றாண்டிற்குமேற் பிரிந்துபோன மலையாளம்போல் வேறுபட்ட கிளைமொழிகளும் செறிந்த மொழி இந்தியென அறிதல் வேண்டும்.

7

இடவேறுபாட்டாலும் மக்கள் ாலும் மக்கள் கூட்டுறவின்மையாலும் எழுத்தும் இலக்கியமும் வழங்காமை அல்லது இன்மையாலும் மொழிகள் திரிவது இயல்பு. கடைக்கழகக் காலத்தில் வேங்கடத் திற்கும் குமரிமுனைக்கும் இடைப்பட்டுத் தமிழே வழங்கிய நிலத்தின் மேலைப்பகுதியில், இன்று கன்னடம், துளு, குடகு, துடவம், கோத்தம் முதலிய பல கிளைமொழிகள் வழங்குகின்றன. இங்ஙனமே எழுத்தும் இலக்கியமும் இல்லாது பரந்த நிலத்தில் வழங்கிய இந்தியும் பலவாறாகத் திரிந்தும் பிரிந்தும் உளது. தில்லியைச் சூழ்ந்த பகுதியில் செவ்விய முறையில் வழங்கும் கடிபோலி என்னும் இந்தி நடைவழக்கு, சென்ற நூற்றாண் டிறுதியில்தான் சீர்திருத்தஞ் செய்யப்பெற்றதாகச் சொல்லப்படுகின்றது. இந்திக்குத் தனியெழுத்து இன்மையாலேயே அது தேவநாகரி யென்னும் சமற்கிருதவெழுத்தில் எழுதப்பெறுகின்றது.

இந்திமொழிக் கிளைகளும் பிரிவுகளும் பின்வருமாறு மூவேறுவகையில் வகுக்கப்படும்: