உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




8

1.

(D)

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

மேல்நாட்டு இந்தி(பச்சானி) - பாங்காரு,

பிரச பாசை (ப்ரஜ்பாஷா), கன்னோசி(கனோஜ்), பந்தேலி, உருது.

(II) கீழ்நாட்டு இந்தி - அவதி, பகேலி, சத்தீசகடி (சத்தீஸ்கடி)

(III) பீகாரி - மைதிலி, போசபுரி (போஜ்புரி), மககி.

2. (D)

3.

(II)

மேலையிந்தி - கடிபோலி, பிரசபாசை, பந்தேலி, கன்னோசி, பாங்காரு.

கீழையிந்தி அல்லது கோசலி - அவதி, பகேலி, சத்தீசகடி.

(III) பீகாரி - போசபுரி, மைதிலி,மககி(மஹி).

(IV) இராசத்தானி - மால்வி, மார்வாடி, மேவதி,

சைபுரி (ஜைபுரி).

சென்னைப் பல்கலைக்கழக இந்தித் துறைத்தலைவர், பர். (Dr.)சங்கரராச நாயுடு தம் ‘இந்தி நடைமொழிகள் - ஓர் உடனுறவு படுத்தம்' (Hindi Dialects - A Correlation) என்னும் ஆங்கிலச் சுவடியில், மேற்குறித்த நாற்கிளையொடு, பகாடி - கர்வாலி, காமயூனி, நேபாலி என்பதையும் ஐந்தாவதாகக் குறிப்பர்.

மேன்மேலும் பெருகி வந்திருக்கும் இம் மூவகைப் பாகுபாட் டினின்று, இந்தி ஒரு தனிமொழியெனக் கூறத்தக்க தகுதியற்ற தென்றும், இந்திவெறியர் இந்தி பேசுவார் தொகையைப் பெருக்கற்கு இனமொழிகளையும் இந்தியோ டிணைத்துக் கூறுகின்றனரென்றும், இதனாலேயே அவர் தித்திருக்குத் தெளிவாகின்ற தென்றும், அறியலாம்.

மேலையிந்தி சூரசேனியினின்றும், கீழையிந்தி அருத்த (அர்த்த) மாகதியினின்றும், பீகாரி மாகதியினின்றும், இராசத்தானி நகர அவப்பிரஞ்சத்தினின்றும், திரிந்துள்ளன என்று மொழிநூலறிஞ ரால் ஒப்புக்கொள்ளப் பெற்றுள்ளது.

மகதநாட்டுப் பிராகிருதமாகிய மாகதியினின்று திரிந்துள்ள பீகாரியை, அதே பிராகிருதத்தின் திரிபாகிய வங்கத்திற்கும் னமாகக் கூறலாமே! இராசத்தானி இட வண்மையாலும் மொழியமைப்பாலும் குசராத்திக்கன்றோ இனமாகும்? கிரையர் சனும் இவ் விரண்டையும் இணைத்தன்றோ கூறுகின்றார்? பகாடியும் இராசத்தானியொடு தொடர்புடையதே.