உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தி வரலாறு

இந்தி நடைமொழிகள் (Dialects) இவைதாமென்று எல்லார்க் கும் ஒப்ப முடிந்தவாறு இன்னும் திட்டமாகவில்லை. மேலை யறிஞரும் கீழையறிஞரும் இதுபற்றிப் பல்வேறுவகையில் முரண் படுகின்றனர். அம் முரண்பாடுகளுள் பதினெட்டைப் பர். சங்கரராச நாயுடு தம் 'இந்தி நடைமொழிகள் - ஓர் உடனுறவுபடுத்தம்' என்னும் சுவடியில் தொகுத்துக் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தி நடைமொழிகளைப் பாகுபடுத்திக் கூறுவதும், இந்தி பேசுவார் தொகையைக் குறிப்பதும், அதை இந்தியைப் பொதுமொழியாக்குதற்குச் சான்றாகக் காட்டுவதும் மிகமிகத் தவறாம்.

3. இந்தியிலக்கியம்

இந்தியென்று சொல்லத்தக்க திருந்தாமொழிநிலை இன்ன

காலத்தில் தோன்றியதென்பது இன்று திட்டவட்டமாய்த்

தெரியாவிடினும், அது ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகட்கு முன் தொடங்கியதென்று கூறின் தவறாகாது. அதன் இலக்கியத் தோற்றம் இற்றைக்கு 500 ஆண்டுகட்கு முற்பட்டதே.

தவத்திரு மறைமலையடிகள் கூறியவாறு, 15ஆம் நூற்றாண்டி லிருந்த இராமாநந்தர் என்னுந் துறவியார் இராமகாதை பற்றிப் பாடிய பாடல்களே இந்தியிலக்கியத் தொடக்கமாகும். அதனால் அப் பாடற்றொகுதி இந்தியில் முதற்பனுவல் (ஆதிகிரந்தம்) என வழங்கி வருகின்றது. அதன்பின் அதே நூற்றாண்டில் அவர் மாணவருள் ஒருவரான கபீர்தாசர், முகமதியப் பெற்றோர்க்குப் பிறந்தவராகவோ முகமதிய ரொருவரால் வளர்க்கப் பெற்றவ ராகவோ இருந்து கடவுளுணர்ச்சி பெற்றதினால், அல்லாவும் அரியும் (திருமாலும்) ஒன்றென்றும், உருவவணக்கமும் வீண் சமயச் சடங்குகளும் கூடாவென்றும், கற்பித்துப் பல பாடல்கள் அவதி யிந்தியிற் பாடினார்; பிராமணீயத்தை வன்மையாய்க் கண்டித்து விப்பிரமதீசி என்னும் செய்யுள் நூலும் இயற்றினார்.

அவருக்குப்பின், அவர் மாணவரான குருநானக்கு என்பவர் பஞ்சாபிற் சீக்கிய மதத்தைத் தோற்றுவித்து, பஞ்சாபியும் இந்தியுங் கலந்த கலவைமொழியில் தம் பாடல்களைப் பாடினார். அவை இந்திமட்டுங் கற்றவர்க்கு எளிதில் விளங்கா.

9

15ஆம் நூற்றாண்டிலேயே, தர்பங்கா மாநிலத்தில் வாழ்ந்த வித்தியாபதி தாகூர் என்னும் திருமாலடியார் கண்ணன் வாழ்க்கையை மைதிலி யிந்தியில் வண்ணித்துப் பாடினார்.

இந்திப் பாவல ரெல்லாருள்ளும் தலைசிறந்தவராகக் கருதப்படுபவர் 17ஆம் நூற்றாண்டிலிருந்த துளசிதாசர் என்பவரே. அவர் பாடிய இராமாயணம் ‘இராமசரித மானசம்' என்பதாகும்.