உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




10

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

உருது இந்திய முகமதியர் மொழியாயிருப்பினும், முகமதிய அரசரெல்லாரும் பாரசீக மொழியில் ஆட்சியை நடத்தினதினால், உருது இலக்கியமும் 18ஆம் நூற்றாண்டிலேயே தோன்றியதாகத் தெரிகின்றது.

இனி, 'இந்தியத் திணைக் களஞ்சியம்‘ (முதன்மடலம்) என்னும் நூலில், இந்தியிலக்கியத் தோற்ற வளர்ச்சியைப்பற்றி பர். சட்டர்சி

வரைந்திருப்பதாவது :

"இவ் இந்தி-உருது- இந்துத்தானி, தில்லி, மீரத்து, சகாரன்புரி ஆகிய நகரங்களைச் சூழ்ந்த வட்டாரமாகிய மேலை யுத்தரப்பைதிரத்தில் (பிரதேசத்தில்) வழங்கும் உலக வழக்கு நடைமொழிகளோ பெ டொத்த இலக்கணமே யுடையது. ஆயின், 'இந்தியிலக்கியம்' என்னும் சொல்லை ஆளும்போது, கி.பி.1000 போல் தொடங்கி வளர்ந்து பஞ்சாபிலிருந்து பீகார்வரை எல்லா இந்திய மொழிகளிலும் நடைமொழிகளிலுமுள்ள இலக்கியமனைத்தையுங் குறிக்கின்றோம். இங்ஙனம் 'இந்தியிலக்கியம்', எடுத்துக்காட்டாக, சந்தபரதாயீ என்பவர் அவப்பிரஞ்சமும் பழைய பிரசபாசையும் பழைய இராசத் தானியும் பழைய பஞ்சாபி வடிவுகளுங் கலந்து ஒரு செயற்கைக் கலவை மொழியில் எழுதிய பிருதுவிராச ராசௌ (ப்ருத்வீராஜ் ராஸௌ) என்னும் பனுவலையும் உள்ளடக்குகின்றது. அதை யொக்க 'இந்தியிலக்கிய'க் கூறாகக் கொள்ளப்பெறும் சூரதாசர் பனுவல்கள், மதுராவையும் குவாலியரையுஞ் சூழ்ந்த வட்டகையில் வழங்கும் தூய பிரசபாசையில் இயற்றப் பெற்றன வாகும். முந்திய ‘இந்தி’ப் பாவலருள் முதன்மை யானவராகக் கருதப்பெறும் துளசி தாசரின் பாடல்கள், அவதிக் கொந்திலும் அதற்குத் தெற்கிலுள்ள பாங்கரிலும் வழங்கும் பழைய அவதி (அல்லது பழைய கோசலி) யிந்திலேயே பெரும்பாலும் பாடப் பெற்றுள. இந்தியில் எழுதப் பெற்ற தலைசிறந்த நூல்களிற் சிலவாகத் தடையின்றியமையும் கபீரின் பனுவல்கள், பிரசபாசை, கோசலி (அல்லது அவதி), பழைய தில்லிப்பேச்சு ஆகியவற்றின் இலக்கணக் கலப்பைக் காட்டுகின்ற கலவைமொழியில் இயற்றப் பெற்றுள. மீராபாயும் வேறுபல இராசத் தானப் பாவலரும் இயற்றியவை, இராசத்தானியொடு பிரசபாசையும் பிற மேலையிந்தி நடை மொழிகளுங் கலந்த கலவையிலுள்ளன. இக்காலத்தில், போச புரியும் மைதிலியும் கர்வாலியும் குமாயூனியுங் கூட இந்தியாகக் கருதப்படு கின்றன. இது, மொழிநூன்முறையிலும் இலக்கிய வரலாற்று முறையிலும் நோக்கின், இந்தியின் இயல்பைப் பற்றிக் குழப்பமான கருத்தை யுண்டுபண்ணுகின்றது." என்பது (ப. 392)

இதனின்று, இந்தியின் ஒழுங்கின்மையையும் குழறுபடைத் தன்மையையும் பல்வேறு மொழிக்கலவை நிலைமையையும்,. தெற்றெனத் தெரிந்துகொள்ளலாம்.