உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




12

ஹம்னே தேக்கா

=

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

நாங்கள் பார்த்தோம்.

உஸ்னே மேரி பஹின்கோ தேக்கா = அவன் (அவள், அது) என் உடன்பிறந்தாளைப் பார்த்தான் (பார்த்தாள், பார்த்தது).

சொற்றொடரமைப்பு, தமிழிற்போல் அத்துணைச் சிறந்த தன்று. சில சொற்றொடர்கள் படர்க்கை யொருமைப்பால் மூன்றற்கும் பொதுவாகும்.

எ-டு : வஹ் ஹை =அவன் இருக்கிறான், அவள் இருக்கிறாள், அது இருக்கிறது.

நன்னூல்

போன்ற இலக்கணங்கூட இந்தியிலில்லை. தொல்காப்பியம் போன்றது வடமொழியிலு மில்லை.

திருக்குறள், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, திருக்கோவையார், நாலடியார், மெய்கண்டான் நூல் (சிவஞான போதம்), திருமந்திரம், கம்பராமாயணம், பட்டினத்தார் பனுவற்றிரட்டு, தனிப்பாடற்றிரட்டு முதலியன போன்ற அரும்பெரு நூல்கள் இந்தியிற் காண்பதினும், ஆமைமயிர்க் கம்பலமும் குதிரைக்கொம்புக் கட்டிலும் பெறுவது எளிதாயிருக்கும்.

5. இந்தி தமிழ்நாட்டிற் புகுந்தவகை

முப்பத்தைந்து ஆண்டுகட்குமுன்பே, பிராமணரையும் வடவரையுமே பெருந்தலைவராகக் கொண்ட பேராயக்கட்சி மாநாடொன்றில், இந்தி இந்தியப் பொதுமொழியாக வேண்டு மென்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்ததேனும், மூவாயிரம் ஆண் ாக ஆரிய அடிமைத்தனத்துள் மூழ்கிக்கிடந்த தமிழகம் அன்று விழிப்படையவில்லை. சற்றே விழிப்படைந்த நயன்மைக் (Justice)கட்சித் தலைவரும், ஆங்கிலர் இந்தியாவை விட்டு அகலார் என்று தவறாகக் கருதியதால், பேராயக்கட்சிச் சூழ்வுகளைக் காட்டுமடத்தில் ஓட்டாண்டிகள் கூடிப் பேசுவதாகவே கருதி யிகழ்ந்துவிட்டனர். நாட்டு வரலா றறியாதவரும் நூற்றுக்குத் தொண்ணூற்றுவர் எழுதப்படிக்கத் தெரியாதவரும் வறுமைமிக்க வரும் ஆரியரைத் தெய்வம்போற் கருதியிருப்பவருமான பொது மக்களோடு, பேராயக்கட்சித் தலைவரும் முனிவர்கோலம் பூண்டு ஏழையெளியவரிடம் இரக்கங்காட்டிய காந்தியடிகளும் நேரடித் தொடர்புகொண்டு, ஆங்கிலராட்சி நீங்கினால் வையகம் வானக மாக மாறிவிடுமென்று அவர் நம்புமாறு கூறியதால் நாட்டுமொழிப் புலமையில்லாதவரும் பொதுமக்களோடு நேரடித் தொடர்பு