உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




இந்தி வரலாறு

13

காள்ளாதவரும் ஆங்கிலராட்சி நீக்கத்தைப்பற்றி ஒன்றும் சொல்லாதவருமான நயன்மைக்கட்சித் தலைவர், 1937ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலிற் படுதோல்வி யடைந்துவிட்டனர்.

மாபெரு வெற்றிகண்ட பேராயம் தமிழரையுந் திரவிடரையுந் துணைக்கொண்டே, தமிழ்நாட்யுைம் திரவிடநாடுகளையும் ஆரிய வண்ணமாக்கவும் நயன்மைக்கட்சி கால்நூற்றாண்டாகச் செய்து வந்த குமுகாய(சமுதாய)ச் சீர்திருத்தத்தைக் குலைக்கவும், திட்ட மிட்டுவிட்டது.அத்திட்டத்தின் ஒரு கூறாகவே, இந்திய அரசியலமைப்பு உருவாகுமுன்பே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் மட்டும் இந்தி கட்டாயப் பாடமாகப் புகுத்தப்பட்டது

இங்ஙனம் புகுத்திய நோக்கம், ஆரியத்தை மிக வன்மையாய் எதிர்ப்பதும், தமிழ் நாகரிகத்தைப் பெரும்பாலும் தூய்மையாகத் தாங்கி நிற்பதும், வடமொழித் துணையின்றி வழங்கவும் தழைத் தோங்கவும் வல்ல மொழியைக் கொண்டிருப்பதுமான, தமிழ் நாட்டில் இந்தியைப் புகுத்திவிட்டால் ஏனை இந்தி பேசா நாடு களில் அதை எளிதாய்ப் புகுத்திவிடலாம் என்பதே.

இன்று தம் தவற்றையுணர்ந்து தமிழரினும் வன்மையாக இந்தியை எதிர்க்கும் தனிப்பெருந் தலைவரான திரு. இராச கோபாலாச்சாரியாரே அன்று இந்தியைப் புகுத்தினாரேனும் முழுப் பழியையும் அவர்மேற் சுமத்திவிட முடியாது. ஏனெனின், அவர் இருநூறு பள்ளிகளிலேயே புகுத்தியிருக்க, தமிழரெனப் பெறும் திரு. அவிநாசிலிங்கஞ் செட்டியாரும் திரு.சி. சுப்பிரமணிய

னாருமோ, அவையுட்பட முறையே, அறுநூறு பள்ளிகளிலும் எல்லாப் பள்ளிகளிலும் புகுத்திவிட்டனர். பின்னர். நாளடைவிற் கல்லூரிகளிலும் இந்தி புகுத்தப்பட்டது.

6. இந்தி பொதுமொழியென்றான வகை

நயன்மைக் கட்சி 1937-ல் படுதோல்வியடைந்தவுடன், அக் கட்சித் தலைவரெல்லாரும் இருக்குமிடந் தெரியாதோடிப் பதுங்கி விட்டனர். இந்தியெதிர்ப்புப் படையின் மாபெரு மறத் தலைவரா யிருந்த திரு. பன்னீர்ச் செல்வத்தையும் முந்நீர் கொள்ளை கொண்டது. அற்றை மாணவர் இற்றை மாணவர்போல் விழிப் படையவில்லை.

புலவர் பெரும்பாலும் வறியராதலின், அலுவலிழப்பச்சத்தால் எதிர்ப்பை விட்டுவிட்டனர். வையாபுரிகள் பணியும் வலுத்தது.

கட்சி வெறியாற் பேராயத்தாரும். விண்ணுலகமிழ்தம் உண்ணக் கிடைக்குமென்னும் நம்பிக்கையாற் பொதுமக்களும்,