உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

இந்தியால் தமிழ் எவ்வாறு கெடும்?

பேராயத் திட்டங்களையெல்லாம் இம்மியும் எதிர்ப்பின்றி யேற்றனர். இயல்பாகத் தமிழ்ப்பற்றின்மையாலும் சமற்கிருதம் ஓங்கும் என்னும் நம்பிக்கையாலும் பிராமணரும் இந்தியைப் பேரூக்கத்தோடு வரவேற்றனர்.

இந்தி தென்னிந்தியப் பள்ளிகள் பலவற்றிற் புகுத்தப் பட்டிருந்தது. தென்னிந்திய இந்தி பரப்பன் மன்றத் தமிழ்க் கேட்டுத் தொண்டும் வரவர வளர்ந்து வந்தது.

ஆங்கிலர் அடியோடு இந்தியாவைவிட் டகன்றது, ஆரிய எதிர்ப்பாளர்க்கெல்லாம் அளவிறந்த மருட்கையை உண்டுபண்ணி விட்டது. அதனால் முற்றுஞ் செயலற்றுப்போயினர்.

இந் நிலையில், இந்தியப் பொதுமொழி எதுவென்று தீர்மானிக்கக் கூட்டிய (மறைமலையடிகளும் பன்னீர்ச்செல்வமும் போன்றார் இல்லாத) பதினெண்மர் கூட்டத்தில் 3ஆம் முறையும் இந்திச் சார்பாக ஒன்பதின்மரும் ஆங்கிலச் சார்பாக ஒன்பதின் மருமாகச் சரிசமமாயிருக்கவும், தலைமை தாங்கிய இந்தி வெறி யரான இராசேந்திரப் பிரசாது நடுநிலை தாங்காது தம் இடுகைக் குடவோலையை இந்திச் சார்பாக இட்டு, எத்துணையோ கலகத் திற்கும் கொலைக்கும் பொருட் சேதத்திற்கும் இந்திய வொற்றுமைக் குலைவிற்கும் கரணியமாகி மறுமையிலும் மாபெரும் பழியேற்றார். 7. இந்திபற்றிய ஏமாற்று

இந்தி சின்மொழியாகவும் புன்மொழியாகவும் பன்மொழி யாகவும் கொன்மொழியாகவும் இருப்பினும், இந்தி வெறியரும் அவரின் அடியாரும் அதைப் பெருமொழியாகவும் உயர்மொழி யாகவும் ஒரு மொழியாகவும் பயன்மொழியாகவும் கூறி ஏமாற்றி வருகின்றனர். (சின்மொழி = சிறுமொழி. கொன்மொழி பயனற்ற மொழி).

சென்ற குடிமதிப்பின்படி, இந்தியர் (இந்திய மக்கள்) தொகை 439,234,771. அதாவது ஏறத்தாழ 44கோடி. இந்தியர் (இந்தி மக்கள்) தொகை 123,025,489. அதாவது ஏறத்தாழ 1214 கோடி. ஆகவே இந்தி பேசுவார் நூற்றுமேனி 28.4 பேர்தாம். மீதி 71.6 பேரும் வேறுபல மொழி பேசுவாராவர். இக் கணக்கும் இந்தி வெறியரின் பெருமுயற்சி யால் ஏற்பட்ட உயர்வுநவிற்சியே. உண்மையாய்க் கணக்கிட்டால் இந்தியார் தொகை இதினுங் குறைவாகவே யிருக்கும். இந்தி யினமொழி பேசுவாரையும் இந்தியாரென்று குறிக்கும்படி இந்தி வெறியர் தூண்டினதாகத் தெரிகின்றது.