உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 33.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




III இந்தியால் விளையுங் கேடு

(i) இந்தியால் தமிழ் கெடும்வகை

1. கவனக்குறைவும் புலமைக் குறைவும்

மதிநுட்பமும் நினைவாற்றலும் வாயமைப்பும் செவித் திறனும் சிறப்பாகப் பெற்றவர் ஐம்பதுவரை பன்மொழிகள் பேசலாம். எத்துணை மொழிகள் கற்கினும் அத்துணை நன்றே. ஆயின், சராசரித் திறமையுள்ள ஒருவர் இருமொழிகளில்தான் தேர்ச்சி பெற முடியும். சிற்றறிவாற் சிறுமையே உண்டாகும். “ஆயிரம் பாட்டிற்கு அடி தெரியும். ஒரு பாட்டிற்கும் உருத் தெரியாது" என்றிருக்கக் கூட ாது.

இக்காலக் கல்வியிற் சிறந்த பகுதி அறிவியல். அது மேலும் மேலும் விரிந்தும் கிளைத்தும் நுணுகியும் சென்றுகொண்டே யிருக்கின்றது.

பண்டைக் காலத்திலேயே,

"கற்க கசடறக் கற்பவை

என்றும்,

99

"கல்வி கரையில கற்பவர் நாட்சில

மெல்ல நினைக்கிற் பிணிபல - தெள்ளிதின் ஆராய்ந் தமைவுடைய கற்பவே நீரொழியப்

பாலுண் குருகிற் றெரிந்து.

99

(குறள். 390)

(நாலடி. 135)

என்றும், கூறினர் அறிஞர். இக்காலத்திலோ, கல்விப் பரப்பையும் காலக் குறுமையையும் சொல்ல வேண்டுவதில்லை. வெறுமொழிகள் வெற்றுக்கலங்களே. அறிவியன் மொழிகளே உயிருணவு நிறை கலங்கள். ஆதலால், ஒவ்வொருவனும் தன் தாய்மொழியொடு ஓர் அறிவியன் மொழியையுங் கற்பது இன்றியமையாததாகின்றது. ஆங்கிலமும் செருமனியமும் இரசியமும் போன்றவை அறிவியன் மொழிகள். ஆதலால் அம் மொழி பேசுவார்க்கு வேறொரு மொழிக் கல்வி இன்றியமையாததன்று..ஆயின், இற்றை நிலைப்படி, உயிருணவு குறைகலமாயுள்ள தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கட்கு